பிரச்சாரத்தின்போது திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!
வேலூர்: வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, என மும்முனை போட்டி நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இவற்றிற்கு மத்தியில், பிரபலங்கள் சிலர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் களமிறங்கியுள்ளனர்.

நடிகர் மன்சூர் அலிகான் தான் வேலூரில் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளிலேயே முதல் ஆளாக வேலூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்தார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பலாப்பழம் சின்னத்தில் வாக்கு கேட்டு வேலூர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் மன்சூர் அலிகான். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடையும் நிலையில், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் பகுதிகளில் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடியாத்தம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications