மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிய காதலன்.. ஓராண்டுக்குப்பின் வெட்டிக்கொன்று பழிதீர்த்த கணவன்
வேலூர்: வேலூரில் ஓராண்டுக்கு முன் மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிப்போனதால ஆத்திரத்தில் இருந்த சரவணன், ஓராண்டு பின் பார்த்த மனைவியின் காதலன் கோபியை ஏதேச்சையாக பார்த்த நிலையில் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றார். இந்த கொலை தொடர்பாக சரவணனை போலீஸார் தேடிவருகிறார்கள்.
வேலூர், சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவில் வசித்தவர் கோபி (38). கார் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) என்பவரின் மனைவி ரமணிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. . இதனால் ஓராண்டுக்கு முன்னர் கணவரைப் பிரிந்த ரமணி, காதலன் கோபியுடன் ஒடிப்போனார்.

அதன்பின்னர் ரமணியும் கோபியும் பெங்களூருவில் குடும்பம் நடத்திவந்திருக்கிறார்கள. இதனால் தனக்கு துரோகம் செய்த மனைவி ரமணிமீதும், அவரை அழைத்துச் சென்ற காதலன் கோபி மீதும் சரவணன் பார்த்தால் கொன்றுவிட வேண்டும் என்கிற அளவிற்கு ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.. இந்தநிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூரிலிருந்து வேலூருக்கு கோபி வந்திருக்கிறார்

இதையறிந்த சரவணன் கோபியை கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார். அம்மனாங்குட்டை என்ற இடத்தில் நின்றிருந்த கோபியை நேற்று முன்தினம் இரவு சரவணன் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார், உறவினர்கள் கோபியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் சிகிச்சைப் பலனின்றி கோபி நேற்று மரணமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார், சரவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள். கொலைக்கு உடந்தையாக மேலும் இரண்டு பேர் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications