மலை பாதையில் உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. வரமறுத்த பெண்.. ஆத்திரத்தில் சண்முகம் செய்த செயல்
வேலூர்: உல்லாசத்துக்கு வர மறுத்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மலர் (25). இவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஓய்வூதியம் பெறுதவற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அல்லேரி மலைப்பாதையில் உள்ள ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் பெண் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு ஒரு புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் கொலை செய்யப்பட்டது மலர் என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் கொலை செய்தது சண்முகம் (30) என தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் சண்முகத்தை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் மலரின் கணவர் உயிரிழந்த நிலையில் நானும் மலரும் நன்றாக பழகினோம். பிறகு கள்ளக்காதலில் ஈடுபட்டோம். அவ்வப்போது நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.
இது எனது மனைவிக்கு தெரியவந்தது. அவர் என்னை கண்டித்து மலருடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி மலர் அணைக்கட்டு பகுதிக்கு தனியாக செல்வதை நான் அறிந்தேன். இதையடுத்து அவருக்கு போன் செய்து உன்னை பார்க்க வேண்டும் என கூறினேன்.
அவரும் நான் சொன்னது போல் மலைப்பாதையில் வந்தார். அங்கு சந்தித்தேன். அப்போது அவரை உல்லாசத்திற்கு அழைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறியது. மீண்டும் மீண்டும் அவரிடம் கெஞ்சி பார்த்தும் அவர் வராததால் ஆத்திரத்தில் அவருடைய தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தேன்.
பின்னர் உடலை முட்புதரின் ஓரமாக தள்ளிவிட்டு சென்றுவிட்டேன். போலீஸ் என்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் சிக்கிக் கொண்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சண்முகம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலால் இரு குடும்பங்கள் சிதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
Madurai Murder: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் கொடூர கொலை.. நள்ளிரவில் நடுங்கும் சம்பவம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications