வேலூரில் ஹோட்டல் ரிவ்யூ செய்தால் கமிஷன்.. ஆசைப்பட்டவருக்கு காத்திருந்த பரிசு.. என்னாது ₹5.75 லட்சம்?
வேலூர்: சமீப காலங்களாகவே ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து விட்டன.. இதில் அப்பாவிகள் பலர் ஏமாந்து பணத்தையும் இழந்து தவிக்கிறார்கள்.. அதனால்தான், யாருமே ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அப்படியிருந்தும் வேலூர் மாவட்டத்திலும், மோசடிகள் விதவிதமாக நடந்துவிடுகின்றன.. இதோ இப்போதும் ஒரு மோசடி சம்பவம் நடந்துள்ளது.
ஆன்லைன் மோசடிகள் பெருகுவதால்தான், வேலூர் சைபர் கிரைம் போலீசார், ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை, அம்மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

அதாவது, "நாங்கள் போலீசார் பேசுகிறோம், உங்களது உறவினரையோ, மகன், மகளையோ கைது செய்கிறோம் உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று சொன்னால், அதை உடனே புறக்கணியுங்கள்.. பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என்று சொல்லி பல மோசடிகள் நடப்பதால், அந்நபர்களையும் புறக்கணியுங்கள், அவர்களிடம் பேசி பணத்தை இழக்காதீர்கள்.
ஆன்லைன் மோசடி
அதேபோல, வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு ஓடிபி நம்பர் வராது, எனவே வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், உடனே கிரெடிட் கார்டு ஆப்ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும். ஆனால், ஆன் செய்து வைத்திருப்பவர்களது பணம் எடுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடியே இருக்கிறார்கள்.
இதோ இப்போது புதுமாதிரியான மோசடி வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு 31 வயதாகிறது.. இவர் தனியார் நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
வேலூர் ஓட்டல் ரிவ்யூ
இவரது வாட்ஸ் அப் நம்பருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மெசேஜ் வந்திருந்தது.. அதில், ஆன்லைன் மூலம் ஹோட்டல் மற்றும் லாட்ஜ்கள், ரிசார்ட்டுகளுக்கு ரிவ்யூ செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று விளம்பரம் போல அந்த மெசேஜ் வந்திருந்தது..
இதை பார்த்ததுமே இளைஞர் உண்மை என்று நம்பி, கமிஷன் பணத்துக்கும் ஆசைப்பட்டு, ரிவ்யூ செய்ய துவங்கினார்.. அதற்காக அவ்வப்போது கமிஷனையும் பெற்று வந்துள்ளார்.
சபலப்பட்ட இளைஞர்
இந்நிலையில் மீண்டும் ஒரு மெசேஜ் வந்துள்ளது.. அதில், கூடுதலாக லாபம் பெற வேண்டுமெனில், நாங்கள் கொடுத்துள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று என தெரிவித்துள்ளனர்.
6 லட்சமும் போச்சு
உடனே அந்த இளைஞரும், அடுத்த சில நாட்களில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 878 ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். இதனால் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று ஆசையாய் காத்திருந்தார்.. ஆனால் கடைசிவரை அவருக்கு கமிஷன் எதுவுமே கிடைக்கவில்லை.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர், கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்.. உடனடியாக வேலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications