வேலூரில் முட்டி போட்டபடி "பிளேடு" எடுத்த மேஸ்திரி.. குடியாத்தம் கோயிலில் சாமி கும்பிட்டு.. கொடுமை
வேலூர்: குடியாத்தத்தின் புகழ்வாய்ந்த கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது. கோயிலில் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணையை, போலீசார் உடனடியாக மேற்கொண்டு வருகிறார்கள்.
குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்தவர் மனோகரன்.. 48 வயதாகிறது.. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வருகிறார். மனைவி பெயர் புஷ்பா.. இந்த தம்பதிக்கு இரண்டு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று மாலை மனோகரன், கோபாலபுரம் பகுதியிலுள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோவிலுக்கு சென்றார்.. குடியாத்தத்திலேயே மிகவும் புகழ் பெற்ற கோயில் இதுவாகும்.. இந்த கோயிலுக்குள் நுழைந்த மனோகரன், உள்ளே சென்றாமல், சற்று தொலைவிலிருந்தே கற்பூரத்தை ஏற்றிவைத்தார்.. பிறகு முட்டி போட்டபடியே, தூரத்திலிருந்து அம்மனை நோக்கி கும்பிட்டார்.
தற்கொலை: பிறகு அடுத்த சில நிமிடங்களிலேயே தற்கொலைக்கும் முயன்றார்.. இதைப்பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து தற்கொலைக்கு முயன்ற மனோகரை தடுத்து நிறுத்தினார்கள்.. ஆனால் அதற்குள் ரத்த வெள்ளத்தில் மனோகரன் கீழே சுருண்டு விழுந்தார்..
பிறகு, பொதுமக்களும் சேர்ந்து, மனோகரனை மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர்... முதலுதவி சிகிச்சை பிறகு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்..
தீவிர சிகிச்சை: அங்கு மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..
கெங்கையம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் இந்த தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினார்கள். பிறகு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது மனோகரன், பிரார்த்தனை செய்துவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டது அதில் பதிவாகி இருந்தது.
கடந்த சில நாட்களாகவே மனோகரன் வீட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்தாராம்.. அப்போது, தன்னை யாரோ கூப்பிடுகிறார்கள் என்று சொல்லி கொண்டே இருந்தாராம்.. ஆனாலும், எதற்காக அவர் கோயிலுக்கு சென்று தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை.
கலங்கடித்த வீடியோ: ஆனால், கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த அந்த காட்சிகள், வெளியாகி பொதுமக்களை பதற செய்து வருகிறது.. மனோகரன் முட்டி போட்டு சாமி கும்பிடுவதும், பிறகு தற்கொலைக்கு முயல்வதும், அதை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நகர்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..
குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் வளாகத்திலேயே, கட்டிட மேஸ்திரியின் இந்த தற்கொலை முயற்சி வேலூர் மாவட்டத்தில் பரபரப்பையும், பரிதாபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications