Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் கணவனுக்கு மாத்திரை குழம்பு ஊற்றிய மோனிஷா.. உடனே வந்த காதலன்! மனைவியின் மாஸ்டர் பிளான் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அருகே கட்டிட தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.. தனது கணவர் ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக மனைவி மோனிஷா நாடகமாடிய நிலையில், நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர்கள் செய்த காரியம் ஊரையே அதிர வைத்துள்ளது.. 2 குழந்தைகள் இருந்தும் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மோனிஷா தீட்டிய அந்த பயங்கர திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (29) என்பவரும், மோனிஷா (23) என்பவரும் 8 வருஷத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்..

Vellore Monisha Tablet Kuzhambu Plan

கிருஷ்ணமூர்த்தி பெங்களூருவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்த நிலையில், மோனிஷா குழந்தைகளுடன் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்..

வேலூர் மோனிஷா

இந்த நிலையில், மோனிஷாவிற்கும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் (31) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இந்த விவகாரம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவந்தது. இதனால் மனைவிக்கு அறிவுரை செய்தார். ஆனால் மோனிஷா கேட்கவில்லை.

இதனால் பெங்களூருவிலிருந்து வந்து மனைவியை கண்டித்தார்.. அப்போதும் மோனிஷா அந்த தொடர்பை நிறுத்தவில்லை.. இதனால் பெங்களூர் வேலைக்கு செல்ல முடியாமல், அந்த வேலையை விட்டுவிட்டு, வீட்டிலேயே கிடந்தார் கிருஷ்ணமூர்த்தி. போதாக்குறைக்கு மனவருத்தத்தில் குடிப்பழக்கத்துக்கம் ஆளாகி உள்ளார்.

மாத்திரை குழம்பு

வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு, மோனிஷாவுக்கு அட்வைஸ் தந்து, இந்த கள்ளக்காதல் தொடர்பாக தகராறும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் கடுப்பான மோனிஷா, தன்னை கணவன் அடித்து துன்புறுத்துவதாக கள்ளக்காதலன் அன்பழகனிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, மோனிஷா இதை அன்பழகனிடம் தெரிவித்தார்.. அதனால் ஆத்திரமடைந்த அன்பழகன், அந்த மாலை மேல்பள்ளிப்பட்டு கிராமத்திற்கு தூக்க மாத்திரைகளுடன் வந்தார்.. அவற்றை மோனிஷாவிடம் கொடுத்து, உணவில் கலந்து கணவனுக்கு கொடுத்து தூங்க வைக்கச் சொல்லினார்..

Vellore Monisha Tablet Kuzhambu Plan

கள்ளக்காதலன் செய்த காரியம்

அதன்படி மோனிஷா இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்தார்.. உணவை சாப்பிட்ட கிருஷ்ணமூர்த்தி ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றார்.. கணவன் மயங்கியதை உறுதி செய்த மோனிஷா, உடனே தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.. பின்னர் அன்பழகன் மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணி (41) ஆகியோர் சுவர் ஏறி வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தனர்..

இந்த நேரத்தில் யாரும் வராதபடி மோனிஷா வீட்டிற்கு வெளியே நின்று கண்காணித்துள்ளார்..கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டதும், இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தி ரத்தவாந்தி எடுத்து இறந்ததாக மோனிஷா கூறினார்.. ஆனால் அவரது தந்தை சந்தேகப்பட்டு போலீசில் புகார் அளித்ததால், வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்..

விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.. இதனை தொடர்ந்து மோனிஷா, கள்ளக்காதலன் அன்பழகன் மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+