Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் எக்குத்தப்பா சிக்கிய ரூ.11 கோடி! திமுக எம்பி கதிர் ஆனந்த் கேஸில் இன்று கோர்ட்டில் என்னாகுமோ

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் கதிர் ஆனந்த் மீதான 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதையடுத்து, திமுக எம்பி கதிர் ஆனந்த் உள்ளிட்ட மூன்று பேரும் இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, கதிர் ஆனந்த் தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.

Vellore MP Kathir Anand

இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.. அதில், கதிர் ஆனந்த் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு பிறகு, காட்பாடி பகுதியில் திமுக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் இருந்து வருமான வரித்துறையினர் ரூ.11 கோடி பணத்தை பறிமுதல் செய்திருந்தனர்..


காட்பாடியில் கதிர் ஆனந்த் வீடு

அப்போது காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீடு, கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில்தான், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பிறகு, கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

வேலூர் எம்பி தேர்தல்

வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்றதாகக் கூறப்பட்ட இச்சம்பவம் அப்போது தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பிறகு, தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்தது. ஆனால், அதற்கு பிறகு நடந்த தேர்தலிலும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தே வெற்றி பெற்றார்.

எனினும். பணம் பறிமுதல் தொடர்பான வழக்கில் எம்.பி கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கதிர் ஆனந்த்தை கண்டித்த நீதிபதி

அந்தவகையில் கடந்த 13ம் தேதியும் விசாரணைக்கு வந்தது.. அப்போது எம்.பி கதிர் ஆனந்த் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ அவர் வந்ததால், நீதிபதி அது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.. "கோர்ட்டுக்கு இதுபோன்று கும்பல் சேர்த்துக் கொண்டு வரக்கூடாது" என கதிர் ஆனந்தை கண்டித்தார் நீதிபதி.

எனினும், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, பூஞ்சோலை சீனிவாசனை கைது செய்ய, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கு பிறகு, பூஞ்சோலை சீனிவாசன், நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இன்று மீண்டும் விசாரணை

இதையடுத்து, கடந்த 20ம் தேதி கதிர் ஆனந்த் ஆஜராக வேண்டிய நிலையில், பூஞ்சோலை, சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்.. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யகுமார், அடுத்த விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அந்தவகையில், இன்றைய தினம் மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.. இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே இதுவரை, 3 பேரும் கூட்டாக விசாரணைக்கு வரவில்லை என்று கூறப்படும் நிலையில், இன்றைய தினம் மூவரும் ஆஜராவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+