எழுந்துவாங்க கேப்டன்! விஜயகாந்த் நலம்பெற வேலூர் முதியோர் இல்லத்தில் பிரார்த்தனை! கலங்கிய கண்கள்
வேலூர்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நலம் பெற வேண்டி வேலூரில் முதியோர் இல்லத்தில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி முதியவர்கள் பிரார்த்தனை செய்தது கண்களை கலங்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் திரைத்துறையில் இருந்தபோது திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். கஷ்டம் என தன்னிடம் வந்து நிற்கும் ஏராளமான திரைக்கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார் விஜயகாந்த்.

அதன்பிறகு அவர் திரைத்துறையில் இருந்து அரசியலில் நுழைந்தார். தேமுதிக எனும் தேசிய முற்போக்கு திராவிட முற்போக்கு கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி எம்எல்ஏவானார். அதன்பிறகு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இதற்கிடையே தான் அவர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அவ்வப்போது அவருக்கு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்ிநலையில் தான் கடந்த 18 ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்பு சளி, இருமல் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நலம் தேறியது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது அவரது ரசிகர்கள் மட்டும் கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்தது.

அதோடு மருத்துவமனை அறிக்கையில், ‛‛விஜயகாந்துக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து விஜயகாந்த் நலம்பெற்று மீண்டும் வீடு திரும்ப தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பல கோவில்களில் விஜயகாந்த் பெயர் மற்றும் அவரது போட்டோவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் விஜயகாந்த் நலம்பெற வேண்டி இன்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள் விஜயகாந்தின் போட்டோ முன்பு வரிசையாக நின்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்கள் கலங்க அவர் நலம்பெற பிரார்த்தனை செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications