வேலூரில் வாடகை வீட்டில் வந்த காதல்.. நண்பனின் காதலியை விரும்பிய நபர்.. மொத்த பேரும் ஆடிப்போயிட்டாங்க
வேலூர்: வேலூரில் பெண்ணுக்காகவே ஒரு கொலை நடந்துள்ளது... கடந்த 2 நாட்களாகவே அதிர்ச்சியையும், பரபரப்பையும் இந்த சம்பவம் தந்து வரும் நிலையில், போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது... இது தொர்பான பல்வேறு பகீர் தகவல்கள் போலீஸ் தரப்பில் வெளியாகி உள்ளன.. யாரிந்த பெண்? நண்பர்களுக்குள் என்ன நடந்தது? என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த டேனி வளனரசு (19), வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் BA இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். காலேஜ் அருகே சாய்நாதபுரத்தில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

செமஸ்டர் விடுமுறையில் அனைவரும் ஊருக்குச் சென்ற நிலையில், டேனி மட்டும் டிசம்பர் 31ம் தேதி இரவு தனியாக வேலூருக்கு திரும்பினார். அதன்பின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தது.
காதலியை விரும்பிய நண்பன்
நண்பர்களிடம் விசாரித்த போது முரணான தகவல்கள் கிடைத்தன. இதனால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் கிஷோர் கண்ணன் மீது சந்தேகம் எழுந்தது. டேனிக்கும் நண்பர்களுக்கும் ஒரே பெண்ணை காதலிப்பதில் முன்விரோதம் இருந்தது. அதன் காரணமாக டேனியை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
புத்தாண்டு தினம் அனைவரும் மது அருந்தியுள்ளனர். போதையில் இருந்த டேனியை இரும்புக் கம்பியால் தாக்கினர். கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சந்தேகம் வராமல் இருக்க விபத்து போல் காட்ட முயன்றனர். சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் 12 கி.மீ தூரத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் சித்தபாறை மலையடிவாரத்தில் வீசி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
பொய் வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. பிடிபட்ட கிஷோர்கண்ணன் போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் சொன்னாராம்.,.
அதாவது கடந்த 1ம் தேதி புத்தாண்டு இரவு சாய்நாதபுரத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு, கிஷோரும், பார்த்தசாரதியும் வந்து பார்த்தபோது, டேனி வளனரசு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாராம்..
4 பேர் அடித்தார்களா?
"என்னை 4 பேர் அடித்துவிட்டனர், நான் உயிர் பிழைக்க மாட்டேன். இத்தகவலை வீட்டிற்கு சொல்ல வேண்டாம்" என்று சொல்லிவிட்டு அடுத்த சிறிது நேரத்தில் இறந்துவிட்டாராம்... எனவே நண்பர்கள் 2 பேரும், டேனியின் உடலை பைக்கில் எடுத்து கொண்டு தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மலையடிவாரத்தில் வீசிவிட்டு வந்ததாக போலீசில் சொல்லி உள்ளார்..
ஆனால், இதை போலீசார் நம்பவில்லை.. அதற்கு பிறகே தங்கள் பாணி விசாரணையை போலீசார் மேற்கொள்ளவும்தான், டேனியை கொலை செய்ததை கிஷோர் கண்ணன் ஒப்புக் கொண்டாராம்.
காதலியை அபகரித்த நண்பன்
புதுச்சேரியை சேர்ந்தவர் பார்த்தசாரதி.. தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவி மீது டேனிவளனரசுவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து தன்னுடைய காதலை வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதையறிந்த பார்த்தசாரதி, தன்னுடைய நண்பன் கிஷோர்கண்ணனிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.. பிறகு பார்த்தசாரதி, கிஷோர் இருவரும் சேர்ந்து டேனியிடம், இது தவறானது. ஒருவர் காதலிக்கும் பெண்ணை நண்பனே அபகரிக்க பார்ப்பது சரியல்ல என்று கண்டித்துள்ளனர்.
புதுச்சேரியில் முகாமிட்ட தனிப்படை போலீஸ்
ஆனாலும் டேனிக்கு அந்த பெண்ணை அதிகமாக பிடித்துவிட்டதால், தன்னுடைய காதலை மாற்றி கொள்ளாமல் இருந்துள்ளார்.. எனவேதான், டேனியை தீர்த்துக்கட்ட நண்பர்கள் 2 பேரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று இரவு டேனிவளனரசுவை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளனர். பிறகு சடலத்தை ஆந்திர எல்லைக்கு எடுத்துச் சென்று வீசியது அம்பலமாகி உள்ளது..
தற்போதைக்கு கிஷோர் மட்டுமே கைதாகி உள்ளார்.. அவர் மட்டுமே மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.. கைது செய்யப்பட்ட கிஷோர் கண்ணனை போலீசார் வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.. ஆனால் முக்கிய குற்றவாளியான பார்த்தசாரதி மாயமாகி உள்ளார்.. அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. அவரைத்தேடி தனிப்படை போலீசார் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications