பேரு வீச்சு தினேஷ்.. 5 பெண்களுடன் கும்மாளம்.. விரட்டிய போலீஸ்.. கால் முறிந்து.. மாவுக் கட்டு!
வேலூர் ரவுடி வீச்சு தினேஷுக்கு மாவுகட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது
Recommended Video
வேலூர்: 5 பெண்களுடன் கும்மாளமிட்ட ரவுடி வீச்சு தினேஷுக்கு கால் முறிந்து மாவு கட்டு போடப்பட்டு, சிகிச்சை நடந்து வருகிறது.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்தான் தினேஷ்.. வீச்சு தினேஷ் என்பது அடைமொழி. ஃபேமஸான ரவுடி. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளன. 2016-ல் தன்னுடைய கூட்டாளி சந்தோஷை பாலாற்றில் உயிரோடு புதைத்து கொன்றவர்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனிலும் வெளியேவந்தவர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஓட.. ஓட.. விரட்டி ஒருவரை கொன்ற வழக்கிலும் முதல் குற்றவாளி இவர்தான். இது சம்பந்தமாகத்தான் போலீஸ் இவரை தேடி வந்தது. ஆனால் மற்றவர்கள் சிக்கினார்களே தவிர தினேஷ் மட்டும் சிக்கவில்லை.

இரவு நேரம்
இந்த சமயத்தில்தான், வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தினேஷ் உள்ளதாக ரகசிய தகவல் வந்தது, பலநாள் காத்திருந்த போலீஸார், ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு செய்தனர். இரவு நேரம்.. அதிரடியாக தனிப்படை போலீஸார் தினேஷ் உள்ள வீட்டை சுற்றிவளைக்க.. போலீசார் உள்ளே நுழைந்தனர்.

5 பெண்கள்
அங்கே 5 பெண்களுடன் தினேஷ் படு குஜாலாவாக இருந்தார். அவருடன் நண்பர் செல்வராஜும் இருந்தார். போலீசாரை பார்த்ததும், அலறி துடித்து ஓடினார் தினேஷ். இருட்டில் தாறுமாறாக ஓடி, கால் ஒடிந்துபோய்.. ஒரு கட்டத்துக்கு மேல் ஓட முடியாமல் கீழே விழுந்துவிட்டார்.

கைது
அவரை விரட்டி சென்ற போலீசார்தான் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உடனடியாக மாவு கட்டு போடப்பட்டது. இப்போதும் சிகிச்சையில்தான் உள்ளார் தினேஷ். மேலும் வீட்டில் 5 பெண்கள் இருந்தார்களே.. அவர்களும் கைது செய்யப்பட்டு, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உரிமையாளர்
வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது. தினேஷ், 5 பெண்கள் இவர்களிடம் முழு விசாரணை முடிந்த பின்னரே பல திடுக் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications