வேலூரில் சர்வீஸ் சாலையில் பொய்கை பிசினஸ் தந்த டிராபிக் ஜாம்.. ரூ.90 லட்சத்தால் விவசாயிகள் ஹேப்பி
வேலூர்: வேலூர் மாவட்டம் பொய்கை சந்தையில் நடந்த வியாபாரத்தால், ஒட்டுமொத்த மாவட்டமே ஆச்சரியத்தில் உள்ளது.. அதேசமயம், ஒருபுறம் லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெற்ற நிலையில், மறுபுறம் சந்தை பகுதியைச் சுற்றி ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களை அவதிப்பட வைத்தது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையானது, இம்மாவட்டத்தின் முக்கிய கால்நடை சந்தையாக விளங்குகிறது.

வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலும், பக்கத்து மாநிலங்களிலிருந்தும் கால்நடை வியாபாரிகள் இங்கு வருகை தருகின்றனர்.அந்தவகையில், நேற்றைய தினமும் கால்நடை சந்தை நடைபெற்றது.. 2,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. முக்கியமாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகை கால்நடைகள் சந்தையை நிரப்பின. கால்நடைகளுடன் சேர்த்து, தீவனப் பொருட்கள், கால்நடை உபகரணங்கள், காய்கறிகள் போன்றவற்றின் விற்பனையும் நேற்று ஜரூராக நடைபெற்றது.
பொய்கை கால்நடை
சந்தை இதன் மூலம் மொத்த வர்த்தகம் ரூ.90 லட்சம் வரை சென்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.. எப்போதுமே இந்த சந்தையில் ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விற்பனை நடைபெறுவது வழக்கமாம்.. ஆனால், நேற்றைய தினம் வர்த்தக அளவு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை திக்குமுக்காட செய்துவிட்டது.வியாபாரிகள் இதுகுறித்து சொல்லும்போது, "சமீப காலமாக பெய்த மழையால் தீவனத் தட்டுப்பாடு இல்லாத நிலைமை ஏற்பட்டது.. இதனால் மாடுகள் வரத்து கணிசமாக அதிகரித்துவிட்டன.. கறவை மாடுகள் மற்றும் கலப்பின பசுக்களை வாங்க விரும்புவோர் அதிகமாக உள்ளதால், அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.கால்நடைகள் மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்துதான், வர்த்தகம் ரூ.90 லட்சம் வரை நடந்தது" என்கிறார்கள்.
வேலூர் சர்வீஸ்
சாலை டிராபிக் ஜாம்இதனிடையே, சந்தை நடைபெறும் நாட்களில் எப்போதுமே சர்வீஸ் சாலையில் கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதும், வாங்குபவர்கள் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்தி செல்வதும், கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிடுவதும் வழக்கமாக உள்ளது.. காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் மக்கள் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்து செல்ல வேண்டிய சூழலும் ஏற்படுகிறது..நேற்றைய தினமும் இப்படியான டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. இதனால் மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.பொய்கை மாட்டுச்சந்தை நடைபெறும் நாள்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகன நிறுத்தத்திற்கு தனி இடம் அமைத்தும், சர்வீஸ் சாலையில் விற்பனை செய்யும் கடைகளை ஒழுங்குபடுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.90 லட்சம் பிசினஸ்
பொய்கை சந்தையில் வர்த்தகம் அதிகரித்தாலும், அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை போதிய அளவில் இல்லாதது, சந்தை வளர்ச்சிக்கு சவாலாக மாறியுள்ளது.நிரந்தர வாகன நிறுத்தம், போக்குவரத்து போலீஸை கூடுதலாக பணியமர்த்துவது, தனி விற்பனை பகுதிகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் நன்மையை தரும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications