ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கொள்ளை.. க்ளூவாக கிடைத்த ருத்ராட்ச மாலை.. தட்டி தூக்கிய போலீஸ்!
வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிய டீக்காராமனை போலீஸார் கைது செய்ததற்கு முக்கிய ஒரு க்ளூதான் காரணம்.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் காட்பாடி சாலையில் பிரபல நகைக் கடை அமைந்துள்ளது. இந்த கடை 5 மாடிகளை கொண்டதாகும். எனினும் தரைத் தளம், முதல் தளத்தில் மட்டுமே விற்பனை நடைபெறுகிறது.
கடையின் 5-ஆவது மாடியில் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்கியுள்ளார்கள். அது போல் இரவு நேர பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் டிசம்பர் 15-ஆம் தேதி திருடர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டனர்.

விசாரணை
இதையடுத்து திருடிவிட்டு அதே வழியில் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயுள்ளதாக கூறுகிறார்கள். இதன் மதிப்பு ரூ 7 கோடியாகும். கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்யப்பட்டன.

நகைக் கடைகள்
அதில் ஒருவர் முகமூடியை அணிந்து கொண்டு நகைக் கடைக்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நபர் அங்கிருந்த அனைத்து கேமராக்களிலும் ஸ்பிரேவை அடித்துவிட்டதால் எந்த காட்சிகளும் பதிவாகாமல் போய்விட்டது. இதையடுத்து இந்த கொள்ளை தொடர்பாக பள்ளிகொண்டாவை சேர்ந்த டீக்காராமன் கைது செய்யப்பட்டார்.

முகமூடி
அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. இந்த குற்றச்சம்பவத்தை எப்படி நிகழ்த்தினார் என்பது குறித்து நடித்து காட்டுமாறு போலீஸார் தெரிவித்தனர். மேலும் சிங்க முகமூடியிலிருந்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதாவது உள்ளூர் குற்றவாளிகள்தான் இப்படி அடையாளத்தை மறைக்க முற்படுவர். வடமாநில குற்றவாளிகளாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்ற கணிப்பின்படி விசாரணையை தொடங்கினர்.
Recommended Video

நகைக் கடை
இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கூறுகையில் நகைக்கடையை சுற்றியுள்ள கேமராக்களை ஆய்வு செய்து ஒருவரை தொடர்ந்து பாலோ செய்தோம். கடைசியில் அவர்தான் குற்றவாளி என தெரிந்தவுடன் அவரை கைது செய்தோம். கொள்ளை போன நகைகளில் ருத்ராட்ச மாலையும் இருந்தது. டீக்காராமன் சிவன் பக்தர். பிடிபட்ட போது ருத்ராட்ச மாலையை தன் கழுத்தில் அணிந்திருந்தார். மற்ற நகைகளை புதைத்துவிட்டார். ருத்ராட்சத்தை பார்த்தவுடன்தான் எங்களுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications