புறம்போக்கு நிலம் வேலூரில்.. 102.82 ஏக்கர் 14 பத்திரப்பதிவு.. காட்பாடி சார் பதிவாளர் ஆபீசில் யாரிவர்
வேலூர்: தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காட்பாடி சார் பதிவாளர் சிவக்குமார் விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.. மெகா முறைகேடு தொடர்பான விசாரணையை மீண்டும் கையில் எடுத்துள்ளனர் போலீஸார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் பெருக்கெடுத்து வருகிறது.. அதிலும், ஏராளமாக வருவாய் கிடைக்கும் துறையில் ஒன்றாக பத்திரப்பதிவு துறை விளங்குகிறது.. அதனால்தான், போலியான ஆவணங்களை, ஒரிஜினல் போலவே தயார் செய்து, பத்திரப்பதிவு நடைபெறும் மோசடிகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

பதிவுத்துறை: இது தொடர்பான சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டாலும், பதிவுத்துறையில் மோசடிகள் இன்னும் முழுமையாக குறையவில்லை. சமீபத்தில் நடந்த பதிவுத்துறை மோசடியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது, அப்போதைய காட்பாடி சார் - பதிவாளர் சிவக்குமார் மீதான புகாராகும்.
காட்பாடியில் தனிநபர்களுக்கு முறைகேடாக 106 ஏக்கர் அரசு நிலம் மோசடியாக பதிவு செய்ததாக சிவக்குமார் மீது புகார்கள் கிளம்பியது. இறுதியில், போலி ஆவணங்கள் வாயிலாக, அரசு நிலத்தை தனி நபர்களுக்கு பதிவு செய்து கொடுத்ததும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த அறிக்கை, பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் மாதம் சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிவக்குமார்: இந்நிலையில், அரசு நிலத்தை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து தந்த சார் பதிவாளர் சிவக்குமார் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். இதில் அரசுக்கு சொந்தமான 105.82 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்து, அதற்கு லஞ்சமாக பல லட்சம் ரூபாய் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் தரப்பில் சொல்லும்போது, "காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் இந்த வருடம் ஜூன் 1ம் தேதி வரை சார் பதிவாளராக சிவக்குமார் பொறுப்பில் இருந்தார். அப்போது, போலியான ஆவணங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு செய்து தந்துள்ளார்.
புறம்போக்கு நிலம்: புறம்போக்கு நிலத்தை 8.85 ஏக்கர், 0.24 ஏக்கர், 0.76 ஏக்கர், 6.01 ஏக்கர், 0.36 ஏக்கர், 5.51 ஏக்கர், 4.55 ஏக்கர், 2 ஏக்கர், 24.37 ஏக்கர், 32.49 ஏக்கர், 0.70 ஏக்கர், 2.90 ஏக்கர், 3.76 ஏக்கர், 12.41 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என மொத்தம் 105.82 ஏக்கர் நிலங்களை 14 பத்திரங்கள் பதிவு செய்து தந்திருக்கிறார்.. இது தொடர்பாகவே வழக்கு பதிந்து விசாரணையை ஆரம்பித்துள்ளோம். இதில், அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்" என்றனர்.
அதாவது, 105.82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் 14 பேருக்கு தான செட்டில்மென்ட் பதிவு செய்து தந்து, அதற்காக குறிப்பிட்ட தொகையையும் லஞ்சமாக வாங்கியிருக்கிறாராம் சிவக்குமார்.
அறிக்கை தாக்கல்: இதுதொடர்பாக, பத்திரப்பதிவு ஆவணங்கள், அதன் ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவைகளை கலெக்டரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அரசு புறம்போக்கு நிலத்தை மறுபடியும் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.. அந்தவகையில் சிவக்குமார் பதிவு செய்து கொடுத்த நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 30 கோடியாம்..!!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications