வேலூரில் தாசில்தார் கிளம்பிட்டாரு.. 5 சென்ட் நிலம், பட்டா.. கலெக்டர் ஆபீசில் பெண்ணால் துடித்த டிஆர்ஓ
வேலூர்: 21 வருடங்களாக பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர்... எனவே வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் ஒருவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொந்தளித்துள்ளது, மாவட்ட மக்களின் கவனத்தையும் திருப்பி வருகிறது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் வழக்கம்போல் நேற்றைய தினமும் நடைபெற்றது.. டிஆர்ஓ மாலதி உள்பட அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

அப்போது யசோதா என்ற பெண்ணும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு தருவதற்காக வந்திருந்தார்.. வேலூர் அடுத்த பொய்கை சமத்துவபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜீவா என்பவரின் மனைவிதான் யசோதா.. 44 வயதாகிறது..
பாதுகாப்பு போலீசார்: கூட்ட அரங்கம் எதிரே கையில் ஒரு பையை எடுத்து வந்தார்.. அந்த பையில் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு, தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
இதைப்பார்த்து பதறிப்போன அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.. பிறகு தண்ணீரை அவர் மீது ஊற்றினார்கள்.. அதற்குள் இந்த விஷயம் டிஆர்ஓ மாலதிக்கு தெரியவந்ததையடுத்து, அவர் உடனடியாக யசோதாவிடம் விசாரணை நடத்தினார்.
5 சென்ட் நிலம்: அவரிடம் யசோதா சொல்லும்போது, "நான் என்னுடைய கணவர் மற்றும் 2 மகள்களுடன் பொய்கை சமத்துவபுரத்தில் வசிக்கிறேன். சமத்துவபுரத்தில் எங்களுக்கு 5 சென்ட் நிலத்துடன் அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் எங்களின் பின்புற வீட்டுக்காரர், எங்களுக்கான பட்டா ஆதாரத்தை காட்டுங்கள். இல்லைவிட்டால் காலி செய்யுங்கள் என்று மிரட்டல் விடுக்கிறார்.
எங்களின் இடத்தை அவர் அபகரிக்க பார்க்கிறார்... நான் கடந்த 21 ஆண்டுகளாக பட்டா கேட்டு பலமுறை மனுக்களை அளித்தும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.. அதிகாரிகள் அலைக்கழித்து வருகிறார்கள்.. எனவே வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் சொன்னார்.
அட்வைஸ்: இதனை தொடர்ந்து டிஆர்ஓ மாலதி சொல்லும்போது, "நாளைக்கே உங்கள் வீட்டுக்கு தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்துவார்கள். அதற்குபிறகு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விபரீதமான செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது" என்று அறிவுரை தந்து யசோதாவை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications