வேலூர் விஜயபானு நினைவிருக்கா? 22 சவரன் நகையை விழுங்கிய "ஐபிஎஸ்".. இப்ப தீர்ப்பை கேட்டு கதறி அழறாரு
வேலூர்: சேலத்தில் ரூ.500 கோடி மோசடி தொடர்பாக 4 பேரில் ஒருவராக கைதாகியிருந்த பெண்மணி விஜயபானு.. இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 17 வருடம் விஜயபானுவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.. 22 சவரன், ரூ.5 லட்சம் பணம் சுருட்டிய வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கின் விவரம் என்ன? சென்னை புழலில் என்ன நடந்தது?
வேலூரை சேர்ந்த விஜயபானு.. சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளார்.. தங்களுடைய அறக்கட்டளையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம், இரட்டிப்பு தொகை தருவோம் என்று ஆசை வார்த்தை கூறி பல பெண்களை நம்ப வைத்துள்ளனர்.

விஜயபானு யார் தெரியுமா
இதனால் பலரும் பணத்தை இந்தஅறக்கட்டளையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.. கடைசியில் ரூ.500 கோடி வரை விஜயபானு மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு வெடித்தபிறகுதான் விஜயபானு என்ற பெயர் மீடியாவில் வெளிவந்து, சேலம் மாவட்டத்தையே அதிர வைத்தது..
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் இது தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டனர்.. அறக்கட்டளை விஜயாபானு உள்ளிட்ட ஜெயபிரதாவுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்குகள் இருக்கிறது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. சேலத்தில் உள்ள 2 தனியார் வங்கிகளில் இருவரது பெயரிலும் 7 சேமிப்பு கணக்குகள் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றில் இருந்த இருவரின் 2 கோடி ரூபாயும் முடக்கப்பட்டது.
வேலூர் விஜயாபானு
மேலும் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்குள் நுழைந்து சோதனை நடத்தி அங்கிருந்த ரூ.12 கோடியே 65 லட்சம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.. இறுதியில் அறக்கட்டளை விஜயாபானு உள்ளிட்ட நிர்வாகி ஜெயபிரதா, பாஸ்கர், சையத் மஹ்மூத் உள்பட 4 பேரும் கைதாகி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டவர் விஜயாபானு.. அதாவது 13 வருடங்களுக்கு முன்பும் ஏகப்பட்ட மோசடியை செய்திருக்கிறார்.. அதில் ஒரு மோசடியில் கைதாகி, கடந்த 2011ல் புழல் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார் விஜயபானு..
அப்போது அங்கிருந்த ஜெயில் வார்டன் விஜயா என்பவரிடம், டெல்லியில் தான் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், ஜெயிலில் நடக்கும் ஊழலை ரகசியமாக அறிந்துகொள்ள, சிறையில் அடைப்பட்டுள்ளதாகவும் கூறி அறிமுகமாகியுள்ளார்.
வார்டன் விஜயா தந்த 22 சவரன் நகை
இதையும் வார்டன் விஜயா முழுதாக நம்பி பழகியிருக்கிறார்.. பிறகு, வேலூர் CMC-யில் மேம்பாலம் கட்ட காண்ட்ராக்ட் எடுத்துள்ளதால், அதற்கு நகை பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்லி, விஜயாவிடம், 22 சவரன் நகைகளை கேட்டு வாங்கியிருக்கிறார் விஜயபானு. இதைத்தவிர ரூ.5 லட்சம் ரூபாயையும் விஜயாவிடம் பெற்றிருக்கிறார்.
ஆனால், 5 லட்சம் பணத்தையும் திருப்பி தரவில்லை, 22 சவரன் நகைகளையும் திருப்பி தரவில்லை.. இந்த மோசடி வழக்கு கடந்த 13 வருட காலமும் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பெண் காவலர் விஜயாவை நம்ப வைத்து ஏமாற்றி 22 சவரன், ரூ.5 லட்சம் பணம் சுருட்டிய வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.
17 வருடம் ஜெயில் தண்டனை
விஜயபானு மீது சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, வேலூர், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த நிலையில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 2 முதல் 3 ஆண்டு வரை என 17 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்னும் அறக்கட்டளை தலைவர் மோசடி , ஐபிஎஸ் அதிகாரி மோசடி, அரசியல்வாதி மோசடி என பல கேஸ்கள் விஜயபானு மீது உள்ளதால், அதற்கெல்லாம் எப்போது விசாரணை முடிந்து தண்டனை கிடைக்குமோ தெரியவில்லை..!!












Click it and Unblock the Notifications