வாலாஜாபாத்தில் கோழியை உயிரோடு கடித்த மேடம் கபிலா ஞாபகமிருக்கா? இதோ செங்கல்பட்டில் "சிவன்" வந்தாச்சு
வேலூர்: நல்ல பாம்பை பிடித்து தனக்கு தானே மாலை போட்டுக் கொண்டு சிவபெருமான் போன்று சாமியார் ஒருவர் காட்சி தந்துள்ள வீடியோ இணையத்தில் 2வது நாளாக பரவி கொண்டிருக்கிறது.. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் சாமியார் ஜெயிலுக்கு போன நிலையில், செங்கல்பட்டு சாமியாரும் ஜெயிலுக்குள் சென்றிருக்கிறார்.. என்ன நடந்தது? யாரிந்த சாமியார்? வாலாஜாபாத் கபிலாவுக்கு என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம் மலாலிநத்தம் சித்தேரிக்கரை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஞான சக்தி நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது... இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாகும்.

அருளாசி - கும்பாபிஷேகம்
அந்த வகையில் இந்த வருடமும் யாக சாலைகள் அமைத்து 108 கலசங்களுடன் கூடிய மகா கும்ப கலசம் நிறுத்தப்பட்டு பல்வேறு வேள்விகள் நடைபெற்று முடிந்தது. கடந்த 11ம் தேதி அருள்மிகு தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் தலைமையில் கும்ப கலசம் புறப்பட்டு நாகாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது பூஜையின்போது, பக்தர்கள் முன்பாக மேஜையில் நல்ல பாம்பு உயிருடன் வைக்கப்பட்டது. ஆனால், அந்த பாம்பு, படம் எடுக்காமல், அசையாமல் அமைதியாக படுத்திருந்தது.. இதனால், பாம்பை பிடித்து வந்த நபர், அந்த பாம்பின் முன்பு துணியை அசைத்து அசைத்து காட்டி, பாம்புக்கு எரிச்சலூட்டினார்..
பாம்பு மீது பூக்கள்
ஆனாலும் பாம்பு அசையவில்லை.. இதனால், பாம்பின் மீது பூக்கள் தூவப்பட்டு பூஜைகள் நடந்தன.. அப்போதுதான் பாம்பு மெல்ல அசைந்து, நகர்ந்தது.. பாம்பை அடைத்து கொண்டுவரப்பட்ட ஓலை பெட்டிக்குள் படுப்பதற்காக பாம்பு சென்றது.. ஆனால், பாம்பை கொண்டு வந்தவர் மறுபடியும் பாம்பை கையாலேயே உலுக்கி, படம் எடுக்கவைத்தார்..
பாம்புக்கு தீபாராதனை முடிந்ததையடுத்து, தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் நல்ல பாம்பை கையால் தூக்கி பக்தர்கள் முன்பு காட்டினார்.. பிறகு தன்னுடைய கழுத்தில் பாம்பை மாலையாக போட்டுக்கொண்டு நின்றதுடன், சிவபெருமான் போல பக்தர்களுக்கு அருளாசியும் தந்தார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, சமூக ஆர்வலர்களின் பார்வைக்கும் சென்றது.. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 கோழிகள்
இப்படித்தான் கடந்த 2019ம் ஆண்டு, வாலாஜாபாத்தில் பெண் சாமியார் சிக்கினார்.. 2000-ம் ஆண்டு முதலே அருள்வாக்கு சொல்லி வருபவர் கபிலா.. MA படித்தவர்.. இவருக்கென கோயில் தனியாக உள்ளது.. 20 கோழிகளை தன்னுடைய கோயிலுக்கு கொண்டு வந்து, அந்த கோழிகளின் கழுத்தை கடித்து துப்பி, தெறிக்க விடுவாராம்.. கோயில்களில் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகுதான், பாம்பு பக்கம் தாவினார்..
கபிலா - பெண் சாமியார்
நல்லபாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அருள்வாக்கு சொல்லி, தன்னை அம்மனாகவே காட்டிக் கொள்வார்.. கபிலாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, புகார்கள் அதிகமாகவும், கபிலாவை சுற்றி வளைத்து வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.. இப்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது பரபரப்பை தந்துவருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications