Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் விழுந்தடித்து ஓடிய பெண்.. ஆரணியில் ரூ.1.50 கோடி ஜிஎஸ்டி! பான் கார்டில் எக்ஸ்போர்ட் கம்பெனி?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சமீப காலமாகவே ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவைகளில் யாருமே ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், வேலூர் சைபர் கிரைம் போலீஸாரும் ஏற்கனவே முக்கிய அறிவுறுத்தல்களை, மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவுடன் சென்றிருக்கிறார்.. மீண்டும் வேலூரில் என்ன நடந்தது?

வேலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பெருகி வருவதால், சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியபடி உள்ளனர்.

Arani Vellore Pan Card

ஆன்லைன் மோசடிகள்

"போலீசார் பேசுகிறோம், உங்களது உறவினரையோ, மகன், மகளையோ கைது செய்கிறோம் உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று சொன்னால், அதை உடனே புறக்கணியுங்கள்.. பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என்று சொல்லி பல மோசடிகள் நடப்பதால், அந்நபர்களையும் புறக்கணியுங்கள், அவர்களிடம் பேசி பணத்தை இழக்காதீர்கள்.

அதேசமயம் வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு ஓடிபி எண் வராது, எனவே வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், உடனே கிரெடிட் கார்டு ஆப்ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும். மாறாக ஆன் செய்து வைத்திருப்பவர்களது பணம் எடுக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்..

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

அப்படியிருந்தும் கடந்த மாதம் கஸ்பாவை சேர்ந்த மெக்ரூன் என்ற பெண் ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் மனு தந்தார்..

அதில், "என்னுடைய மகன் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.. கடந்த ஒன்றரை வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், எங்கள் வீட்டிற்கு ஒரு சம்மன் வந்தது. அதில் என்னுடைய மகன் பெயரில் மதுரையில் தொழில் நடப்பதாகவும், அது நவம்பர் மாதம் 2024ம் ஆண்டில் இருந்து செயல்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகன் பெயரில் லட்சக்கணக்கான பணம்

இதுகுறித்து விசாரித்தபோதுதான், என்னுடைய மகன் பெயரில் மதுரை மாவட்டம், அழகர் கோயில் மெயின் ரோடு கே.புதூர் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வந்ததும், அந்த நிறுவனத்திற்கு எனது மகன் பெயரில் ஜிஎஸ்டி எண் சென்னை மண்டலத்தில், மதுரை 2வது டிவிஷனில் பெறப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

அதாவது என்னுடைய மகன் பெயரில் போலி நிறுவனத்தை நடத்தி, அதன்மூலம், லட்சக்கணக்கான பணம் பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி ரூ.1.50 கோடி

இந்நிலையில், மீண்டும் ஒரு மோசடி நடந்துள்ளது.. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. அப்போது குடியாத்தம் பகுதியை சேர்ந்த 30வயது இளம்பெண் மனு ஒன்றை தந்திருந்தார்.

அதில், "சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து, ரூ.1.50 கோடி ஜிஎஸ்டி தொகை செலுத்த வேண்டும் என சம்மன் வந்தது. உடனே சென்னைக்கு சென்று ஜிஎஸ்டி அலுவலத்தில் கேட்டபோது, எனது ஆதார் கார்டு, பான்கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எனது பெயரில் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.50 கோடி ஜிஎஸ்டி தொகை நிலுவையில் இருப்பதாகவும், அந்த தொகையை உடனே செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஆரணியில் சொந்த நிறுவனம்

எனக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அடையாள அட்டைகளை பயன்படுத்தி எனக்கு தெரியாமல் யாரோ நிறுவனம் தொடங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்..

இந்த புகார் தொடர்பான நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. ஆதார், பான்கார்டை தவறாக பயன்படுத்தி ஆரணியில் ஏற்றுமதி நிறுவனம் பெயரில் ரூ.1.50 கோடி நிலுவை ஜிஎஸ்டி தொகை கட்ட கோரி சம்மன் அனுப்பிய விவகாரம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+