வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன
வேலூர்: வேலூரில் பெண் போஸ்ட் மாஸ்டர் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் முதல் முதலாக தேர்தலை தவெக சந்திக்க உள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது திருப்பத்தூரில்?
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்து வருகிறார் அந்த 24 வயது இளம்பெண்.. இவர் அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்..

இவர் தனது அன்றாடப் பணிகளுக்காகத் தினமும் தனது டூவீலரில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று வருவது வழக்கம்.. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சத்தியமூர்த்தி என்பவர், அந்த பெண்ணைத் தொடர்ந்து பின் தொடந்து வந்துள்ளார்..
திருப்பத்தூர் தவெக நிர்வாகி
சத்தியமூர்த்தி தற்போது திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.. அந்த இளம்பெண் தனது டூவீலரில் பணிக்கு செல்லும்போதும், பணி முடிந்து வீடு திரும்பும்போதும், சத்தியமூர்த்தி தனது பைக்கில் பின்தொடர்ந்து செல்வாராம்..
தினந்தோறும் பின்னாடியே சென்று, வழியில் அந்த பெண்ணிடம் தவறான முறையில் சைகைகள் காட்டுவாராம்.. தனது பைக்கால் அவரது டூவீலரை மோதுவது போல சென்று மன உளைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளார்.. இந்தத் தொல்லைகள் ஒரு சில நாட்களோடு நின்றுவிடாமல் தொடர்ச்சியாக நீடித்து வந்துள்ளது..
பெண் போஸ்ட் மாஸ்டர்
இதன் உச்சகட்டமாக, நேற்று முன்தினமும் சத்தியமூர்த்தி தனது பைக்கில் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்துள்ளார்.. இதனால் மிகுந்த அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்த பெண் போஸ்ட் மாஸ்டர், ஒருகட்டத்தில் தைரியமாகச் சத்தியமூர்த்தியை வழிமறித்து கண்டித்துள்ளார்.. தன்னை வழிமறித்து கண்டித்ததால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, தனது பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று பெண் போஸ்ட் மாஸ்டரின் மொபட் மீது மோதி, அவரை கீழே தள்ளிக் கொலை செய்ய முயன்றுள்ளார்..
இந்தக் கொடூர சம்பவத்தில் இருந்து தப்பிய அந்தப் பெண், உடனடியாகக் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சத்தியமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. ஆனால் அதற்குள் சத்தியமூர்த்தி தலைமறைவாகி விட்டார்.. எனவே அவரை போலீசார் தேடி வருகின்றனர்..
அடுத்தடுத்த புகார்கள்
மேலும், விசாரணையின்போதுதான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.. ஏற்கனவே ஒரு பெண் மாயமான வழக்கில், சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சத்தியமூர்த்தி மீது இதே காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.. அரசியல் பொறுப்பில் உள்ள ஒருவரே பெண் அரசு ஊழியருக்கு இத்தகைய தொல்லை கொடுத்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
நாமக்கல் நிர்வாகி நீக்கம்
இப்படித்தான் கடந்த டிசம்பர் மாதமும் நாமக்கல்லில் பாலியல் சம்பவம் வெடித்தது.. தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில்நாதன் (47), ஈரோடு அருகே நடந்த விஜயின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பும் வழியில் கூட்டப்பள்ளியில் மகளிரணி நிர்வாகி வீட்டில் தங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் அவர் வீட்டிற்குள் சென்றதை கவனித்த உறவினர்கள் கதவைத் திறக்க வைத்து, உள்ளே இருந்த செந்தில்நாதனை பிடித்து தாக்கியதுடன், அவருக்கு அந்த பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பது வெளிவந்தது. பின்னர் கட்சி நிர்வாகிகள் தலையிட்டு போலீஸ் புகார் இல்லாமல் சமரசம் செய்தனர்.
சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த பெண்ணும் விளக்கம் அளித்து நடவடிக்கை கோரினார். இதையடுத்து, மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காரணத்தால், செந்தில்நாதன் தனது மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கட்சியால் நீக்கப்பட்டார்.. இந்நிலையில், மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் வெடித்துள்ளது தவெகவுக்குள் சலசலப்பை தந்து வருகிறது..!!
-
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
தவெகவில் புதிய அதிகார மையம்.. கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்.. கவனிச்சீங்களா? -
கொடுமை! குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு.. புகார் அளித்த வழக்கறிஞர் மீது தவெகவினர் தாக்குதல் -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
ரூ.1 லட்சம் மாமூல்.. செங்கல்சூளை உரிமையாளரை மிரட்டி தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி.. அதிரடி நீக்கம் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி!












Click it and Unblock the Notifications