தமிழகத்தில் அரசு ஊழியராக ஆசையா? நெருங்கும் குரூப்-2 தேர்வு.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், விரைவில் ஒவ்வொரு மாவட்டததில் தொடங்கப்பட இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெற முடியும். இதுபற்றி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்ட அறிவிப்பினை பார்க்கலாம்.
குரூப்-2 போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பற்றி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-II, IIA 2025-ம் ஆண்டு 645 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலை போட்டித்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். போன்ற மத்திய அரசு போட்டித்தேர்வு முகமை.

டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., எம்.ஆர்.பி. போன்ற மாநில அரசு போட்டி தேர்வு முகமை, பொதுத்துறை நிறுவனம் மற்றும் முப்படைகளின் காலிப் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் அதிகளவிலான வகுப்பு தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலைநாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04172-291400, மின்னஞ்சல் முகவரி [email protected]யில் மற்றும் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பிரத்யேக இணைய தளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்ல, வேலூர்,திருப்பத்தூர் சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், திருச்சி, என தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி வககுப்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பயிற்சி பெற்று அரசு அதிகாரிகளாக மாறலாம். அதற்கு முயற்சி தான் முதல் படியாகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications