வேலூர் புதுப்பெண் பவித்ரா.. சூப்பர் மார்க்கெட் ஓனர் கணவர்.. சின்ன விஷயத்தால் நொறுங்கிய குடும்பம்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் பவித்ராவுக்கும், அதே பகுதியில் உள்ள ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் சந்தோஷ், தனது மனைவி பவித்ராவுக்கு பொங்கலுக்கு புதுப்புடவை வாங்கித்தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பவித்ரா எடுத்த முடிவு மொத்த குடும்பத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.
இன்றைய 2 கே கிட்ஸ் தம்பதிகள் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளை எப்படி தீர்ப்பது என்று யோசிக்காமல், வாழ்க்கையில் அவ்வளவு தான் இனி ஒன்றுமில்லை என்று நினைத்து தவறு செய்கிறார்கள். சிலர் சின்ன சின்ன பிரச்சனைகளால் திடீரென உடைந்து போய், உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்கிறார்கள்.

அப்படி எடுக்கும் முடிவுகள் அவரது வாழ்க்கையை மட்டுமல்ல..அவரை சார்ந்துள்ளவர்களையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறது. குறிப்பாக சுற்றியுள்ள உறவுகள், சூழல்களை பற்றி சற்றும் யோசிக்காமல் எடுக்கும் முடிவு குடும்பத்தையே கலங்க வைத்துவிடுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மனைவி எடுத்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் பவித்ரா. இவருக்கு 22 வயது ஆகிறது. இவருக்கும் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி, ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சாமன்னன் என்பவரின் மகன் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.
சந்தோஷ் பக்கிரிதக்கா பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவித்ரா தனது கணவரிடம், தன்னை தனியாக அழைத்து சென்று பொங்கலுக்கு புதுப்புடவை எடுத்து தருமாறு கூறியுள்ளார். இதில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறதாம்.
இதனால் புதுப்பெண் பவித்ரா கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான ஏலகிரி கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு கடந்த ஜனவரி 9ம் தேதி இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு உயிரைவிட்டார். மனைவி இறந்த தகவல் அறிந்ததும் சந்தோஷ் விஷம் குடித்து உயிரை மாயத்துக் கொள்ள முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுப்புடவை பிரச்சனையில் குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications