அரக்கோணம் இன்ஸ்பெக்டர்.. சொந்த ஊருக்கு போன மனைவி.. விடியற்காலையில் வீட்டுக்குள் கண்ட காட்சி
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தாக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுனில்குமார். இவர் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊருக்கு போய்விட்டார். இதனால் விரக்தியில் விடியற்காலையில் செய்த செயலால் மொத்த குடியிருப்பு பகுதியும் ஆடிப்போனது.
கணவன் மனைவி இடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை பேசித்தீர்த்தால் சரியாகிவிடும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகளை சரி செய்யவே முடியாத அளவிற்கு யாராவது ஒருவர் பிடிவாதமாக இருப்பார்கள். மனைவி சில நேரங்களில் இறங்கி வரமாட்டார். சில நேரங்களில் கணவர் இறங்கிவரமாட்டார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து புரிந்து கொண்டு பிரச்சனைகளை பேசி தீர்த்தால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

ஆனால் தவறு செய்தவர்களை குற்றம்சாட்டும் அதேநேரம் குடும்ப உறவை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், குடும்பமே உடைந்து போக சிலரது செயல்கள் காரணமாக இருக்கிறது. பல நேரங்களில் கணவன் மனைவி இடையே சண்டைக்கு குடும்ப உறவுகள் காரணமாக இருக்கின்றன. இந்த சண்டைகளை தவிர்க்க ஒருவரை ஒருவர் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுக்காமல் இருந்தாலே உறவு நிலைக்கும். இல்லாவிட்டால் நாம் நினைக்காத அளவிற்கு வேகமாக உறவுகள் முறிந்தவிடும். அப்படிப்பட்ட சூழலில் பலர் தவறான முடிவெடுக்கிறார்கள். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கருத்துவேறுபாடு காரணமாக மனைவி ஊருக்கு சென்ற விரக்தியில் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் உயிரையே விட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த 48 வயதாகும் சுனில்குமார் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விசாலாட்சியம்மாள். இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு மகன் சென்னையில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.. மற்றொரு மகன் தக்கோலம் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்.. இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தனது குடும்பத்துடன் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையம் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.
அண்மையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனைவி விசாலாட்சியம்மாள் அவரது ஊருக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக சுனில்குமார் தனது 2-வது மகனுடன் விரக்தியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று விடியற்காலை அவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்த தக்கோலம் போலீசார் நேரில் சென்று சுனில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி பிரிந்து சென்றதால் அரக்கோணம் இன்ஸ்பெக்டர் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications