ஜோலார்பேட்டையில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்.. முன்னாள் ராணுவ வீரர் செய்த அசிங்கம்
வேலூர்: வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், சில நேரங்களில் தெரிந்தவர்களால் , உறவினர்களால், அண்டை வீட்டாரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடக்கிறது. அப்படித்தான் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மனநல பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முன்னாள் ராணுவ வீரர் அத்துமிதிதாக புகார் எழுந்தது அந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், சில நேரங்களில் குழந்தைகள் , மிகவும் தெரிந்த நபர்களால் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களால் அத்துமீர்களுக்கு உள்ளாக்கப்படுவது நடக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் இந்த பிரச்சனையை வெளியில் சொல்லத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு தெரிந்தவர்களை மிக மோசமான அத்துமீறல்கள் ஈடுபடுவது நடக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்த (22) மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணின் தாயார் மளிகை கடைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஏலகிரி கிராமம் மூடன் வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (39) இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பவர், இளம் பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அத்துமிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இளம் பெண்ணிடம் பிரபு அத்துமீறியது தெரியவந்தது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முன்னாள் ராணுவ வீரர் மீட்டு ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து இளம்பெண் தாயார் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜோலார்பேட்டை பகுதியில் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை இளம்பெண்களுக்கு கடந்த சில நாட்களில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications