வேலூர் பார்வை மாற்றுத்திறனாளி ராமதாஸ் தம்பதி.. அரசு பேருந்தில் நடந்த அவலம்.. நெட்டிசன்கள் ஆவேசம்
வேலூர்: எங்களிடம் அரசின் இலவச பஸ் பாஸ் இருக்கிறது. ஆனால் ஏன் எங்களிடம் இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.. பேருந்துகளில் எங்களை ஏற்றுவதும் இல்லை.. அப்படியே ஏற்றினாலும் எங்களுக்கு உட்கார சீட் கூட கொடுக்க மாட்றாங்க என்று வேலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி தெரித்தனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிகாரிகள் தானாக முன் வந்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள்.
அரசு பேருந்துகளில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கை கால்கள் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகள், பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியோர் இலவச பஸ் பாஸ் பயணச் சலுகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

அதாவது உடல் இயக்கக் குறைபாடு உடையோர், காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆறு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பழைய பஸ் பயணம் சலுகை அட்டை அசல் மற்றும் நகல், கல்விக்காகப் பணி புரிவதற்காகப் பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் உள்ளிட்டவற்றை அளித்தால் இலவச பஸ் பாஸ் அரசால் தரப்படும். அதேபோல் இலவச பஸ் பாஸை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும்..
இந்நிலையில் இலவச பாஸ் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளை அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் ஏற்றிக் கொள்ள மறுப்பதாக புகார்கள் உள்ளது. இந்த புகார் இன்று நேற்று அல்ல. பல வருடங்களாக உள்ளது. அதேநேரம் அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை ஏற்றவே மாட்டார்கள் என்று சொல்லிவிடவும் முடியாது. திட்டிக்கொண்டே ஏற்றிக்கொள்வார்களாம். அப்படியே ஏற்றிக்கொண்டாலும் பேருந்துகளில் உட்கார இடம் கொடுக்க மாட்டார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் அவரது மனைவி பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆவார். இவர்கள் வேலூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு அரசு பேருந்தில் ஏறி உள்ளனர். பின்னர் இறங்கும் இடம் வந்த போது மாற்றுத்திறனாளி ராமதாஸ் இறங்கிவிட்டார். அவரது மனைவி இறங்குவதற்குள்ளதாகவே பேருந்தை நகர்த்த முயன்றார்களாம். நல்லவேளையாக எதுவும் ஆகவில்லை.. இதனால் கோபம் அடைந்த பார்வை மாற்றுத்திறனாளி, எதாவது ஒன்று ஆனால் என்ன செய்வது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், நாங்கள் வேலூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வருகிறோம்.. எங்களிடம் கண்டக்டர் ஏன் இரண்டு பேரும் எப்போதும் இதுலையே வர்றீங்க என்று கேட்டார். பொதுவாகவே எங்களை பேருந்துகளில் ஏற்றுவது இல்லை.. அதையும் மீறி ஏற முயன்றாலும் சீட் இல்லை என்று கூறுவார்கள்.. எனினும் நாங்கள் சீட்டு கேட்பது இல்லை.. பரவாயில்லை ஏதோ ஏற்றி சொல்கிறார்களே என்று நினைத்து விட்டுவிடுவோம்...
அதேநேரம் ஒரு சில அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனர்கள் எங்களை கூப்பிட்டு ஏற்றி செல்வார்கள். அதிலும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் வந்த இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிக்கு என ஒதுக்கப்பட்ட சீட்டில் பிற சாதாரண பயணிகளே அமர்ந்திருந்தனர். அதை நாங்கள் கேட்டாலும் கொடுப்பது இல்லை.. நாங்கள் இறங்கும் போது, உடனே வண்டியை எடுத்துவிட்டார்கள்.. மனைவி இதில் கீழே விழுந்துவிட்டார். நல்லவேளையாக அடிபடவில்லை என்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஆவேசமடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications