வேலூரில் பெற்றோர் இல்லாத தங்கைக்கு கல்யாணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற அண்ணன்.. இப்படியாக ஆகணும்
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மசிகம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபு என்பவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பெற்றோர்கள் உயிருடன் இல்லை.. தனது தங்கைக்கு பிரபு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். கடந்த 3ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக பல கனவுகளுடன் அழைப்பிதழ் கொடுக்க சென்ற பிரபுவுக்கு யாருமே நினைத்து பார்க்க முடியாத சம்பவம் நடந்துள்ளது.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகள் தமிழ்நாட்டில் அதிகரித்தபடி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் உள்பட பல்வேறு நகரங்களில் மற்றும் கிராமங்களில் மாடுகள் வளர்ப்போர் சாலையை பயன்படுத்துகிறார்கள். அந்த மாடுகள் சாலைகளில் சுற்றும் போது, திடீரென ஆவேசம் அடைந்து மற்றவர்களை தாக்கிவிடுகின்றன. இல்லை என்றால் திடீரென சாலையில் ஓடி வாகனத்தில் செல்வோரை விபத்தில் சிக்க வைக்கின்றன. இதன் காரணமாக பல கனவுகளுடன் சாலையில் பயணிப்போரை கலங்கி போக வைக்கிறது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நடந்த ஒரு விபத்து ஒரு குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மசிகம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற ஷாம்பிரபுவுக்கு 27 வயது ஆகிறது. பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பெற்றோர் உயிருடன் இல்லை.. பெற்றோர் இல்லாத நிலையில், தனது தங்கை சாரோனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 3-ந் தேதி தங்கை சாரோனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி ஷாம்பிரபு, மசிகம் கிராமத்தை சேர்ந்த தனது நண்பர் சிவப்பிரகாசம் (27) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தங்கையின் திருமண அழைப்பிதழை குடியாத்தத்திலுள்ள உறவினர்களுக்கு கொடுத்து விட்டு பேரணாம்பட்டு அருகே பேரணாம்பட்டு - குடியாத்தம் சாலையில் கொண்டம் பல்லி கிராமம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. இதனால் மாட்டின் மீது மோதாமலிருக்க பிரேக் பிடித்தபோது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் ஷாம்பிரபு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். தங்கை திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது விபத்தில் அண்ணன் இறந்த சம்பவம் வேலூர் பேரணாம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications