வேலூர் டாக்டர் கடலரசி.. திருமணமாகி இரண்டே வருடத்தில்.. உறவினர்கள் இப்படியா பார்க்கனும்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியை சேர்ந்த 24 வயதாகும் கடலரசி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணாகி 2 வருடங்கள் ஆகிறது. நேற்று முன்தினம் டாக்டர் கடலரசி, மாத்திரையை சாப்பிட்டவர் மீண்டும் எழுந்திருக்கவில்லை.. என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.
குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளால் சிலர் வாழ்க்கையில் தவறான முடிவெடுக்கிறார்கள். சிலர் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்கிறார்கள். அப்படி எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறது. சிலர் சுற்றியுள்ள நிகழ்வுகளை யோசிக்காமல் எடுக்கும் முடிவு, அவரை மட்டுமல்ல, அவரை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே டாக்டர் எடுத்த முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியை சேர்ந்த 28 வயதாகும் இளந்தென்றல் என்பவர் மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கடலரசி (24). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இளந்தென்றல் , கடலரசி தம்பதிக்கு கல்யாணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது.
டாக்டர் தம்பதியாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் ஜனவரி 7ம் தேதி அன்று இரவு கடலரசி வீட்டில் மாத்திரையை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், டாக்டர் கடலரிசியை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கடலரசி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. இதையடுத்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார், டாக்டர் கடலரிசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், டாக்டர் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications