Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பத்தூரில் வெற்று காசோலை தந்த கூலி தொழிலாளி.. இப்போது மிகப்பெரிய சிக்கல்.. என்ன செய்ய வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் மாட்டு லோன் வாங்கி தருகிறேன் என்று கூறி, கூலி தொழிலாளியிடம் வெற்று காசோலை வாங்கிய கம்பெனி உரிமையாளர், 3 லட்சம் பெற்றுவிட்டதாக காசோலையை நிரப்பி பிளாக் மெயில் செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். வெற்று காசோலை என்பது எவ்வளவு ஆபத்தானது.. ஏன் அதனை யாருக்கும் வழங்க கூடாது என்பதையும், திருப்பத்தூரில் நடந்த சிக்கல் பற்றி பார்ப்போம்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மகன் கௌதம் (21). இவர் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் நடத்தி வரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கௌதம் தன்னுடைய வீட்டில் சண்டை போட்டதன் காரணமாக மூன்று மாதங்களாக ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியிலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

What should a wage worker who gave a blank cheque in Tirupattur do to avoid legal action

மாட்டு லோன்

அப்போது கம்பெனி ஓனர் ஹரி உனக்கு மாட்டு லோன் வாங்கி தருகிறேன் எனக் கூறினாராம். இதனை நம்பிய கௌதம் தன்னிடமிருந்த மூன்று நிரப்பப்படாத காசோலைகளை கையெழுத்து போட்டு, வேலை செய்யும் கம்பெனி ஓனரிடம் கொடுத்தாராம். இந்த நிலையில் அந்த ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை புரிந்த லோகேஷ் என்பவருக்கும் கௌதம் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வக்கீல் நோட்டீஸ்

இதனால் ஓனர் ஹரி லோகேஷ்க்கு சப்போர்ட் செய்யும் வகையில் மாட்டு லோன் வாங்க கொடுக்கப்பட்ட காசோலையை லோகேஷிடம் கொடுத்துவிட்டாராம். இதனால் லோகேஷ் தனக்கு மூன்று லட்ச ரூபாய் தர வேண்டும் எனக்கூறி வக்கீல் நோட்டீஸ் கௌதமுக்கு அனுப்பி பிளாக் மெயில் செய்து வருவதாக கூறப்படுகிறது. மாட்டு லோன் வாங்கி தருவதாக கூறி பெறப்பட்ட காசோலையை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி ‌ கௌதம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

வெற்று காசோலை ஆபத்தானது

இப்படியான சூழல் ஏன் வருகிறது. வெற்று காசோலை ஏன் ஆபத்தானது.. எப்படி ஏமாற்றுவார்கள் என்பதை முதலில் பார்ப்போம். அதன்பிறகு பிரச்சனைக்கான தீர்வை பார்ப்போம். வெற்று காசோலை அதாவது பிளாங்க செக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது . ஏனெனில்
வெற்று காசோலையில் நீங்கள் கையெழுத்திட்டு, தொகை மற்றும் தேதியை நிரப்பாமல் கொடுத்தால், அதை வைத்திருக்கும் நபருக்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைத்துவிடும்.

What should a wage worker who gave a blank cheque in Tirupattur do to avoid legal action

பணம் எவ்வளவு வேண்டுமானாலும் நிரப்ப முடியும்

தடையற்ற தொகையை நிரப்பும் உரிமை கிடைத்துவிடும். காசோலையைப் பெறும் நபர், நீங்கள் அனுமதியளித்த தொகையைவிடப் பல மடங்கு அதிகமான தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு அல்லது அதற்கு மேலும் அவரால் நிரப்ப முடியும்.
மேலும் அவர் விரும்பும் தேதியைப் பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம், ஏமாற்றுபவர் உங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையைத் தொடங்கும் காலக்கெடுவைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள இயலும்.

வெற்று காசோலை தந்தால் என்ன சிக்கல்

காசோலையின் பின்புறத்தில் அல்லது வேறு எந்த ஆதாரத்திலும் நீங்கள் குறிப்பு எதுவும் எழுதாமல் விட்டால், ஏமாற்றுபவர் இந்தக் காசோலையை ஒரு பெரிய கடன் அல்லது கொடுக்கல் வாங்கலுக்கான ஆதாரமாகக் காட்டிவிட முடியும். அந்தக் காசோலை உரிய தேதியில் பணமில்லாமல் திரும்பி வந்தால் (Cheque Bounce), காசோலையைப் பெற்றவர் பிரிவு 138-ன் கீழ் (Negotiable Instruments Act, 1881) கிரிமினல் நடவடிக்கை எடுக்க உங்களுக்கு எதிராக சட்டப்பூர்வ உரிமையை பெறுவார்.

செக் பவுன்ஸ் பிரச்சனை

மாட்டுலோன் வாங்க செக் கொடுத்தவர்கள் போல், வெற்று காசோலையில் அதிக தொகையை நிரப்பி பணம் கேட்டால் அல்லது செக் பவுன்ஸ் ஆனதாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுத்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும். உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேடும். காசோலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், உங்களை அச்சுறுத்தியதற்காகவும் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் பிரிவுகளின் கீழ் புகார் அளியுங்கள்.

புகார் அளியுங்கள்

நீங்கள் கொடுத்த காசோலை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை வங்கி மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும். அந்த காசோலையின் எண்ணைக் குறிப்பிட்டு, அதன் பேமெண்ட்டை நிறுத்துமாறு கோரிக்கை வைக்க வேண்டும். அத்துடன் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் அனுபவம் வாய்ந்த ஒரு வழக்கறிஞரை அணுகி, உங்கள் பக்கம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் (காசோலையை ஏன் கொடுத்தீர்கள், உண்மையான தொகை என்ன) விளக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வாதிட வேண்டும்

நீதிமன்றத்தில் ஏமாற்றுபவர் உங்களுக்கு எதிராகப் பிரிவு 138-ன் கீழ் வழக்குத் தொடர்ந்தால், நீதிமன்றத்தில் உங்கள் வாதங்களை வைக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட காசோலை கடனுக்காக அல்லாமல், ஏதேனும் ஒரு பரிவர்த்தனைக்கு வெறும் பாதுகாப்பிற்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்க முயற்சிக்க வேண்டும். காசோலையில் நிரப்பப்பட்டுள்ள அதிக தொகையை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையான கொடுக்கல் வாங்கல் தொகை இதுவல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.. கையெழுத்து மட்டுமே உங்களுடையது என்றும், மற்ற அனைத்து விவரங்களும் உங்கள் அனுமதியின்றி ஏமாற்றுபவரால் நிரப்பப்பட்டுள்ளது என்றும் நிரூபிக்க முயற்சிக்க வேண்டும்.

எப்படி நிரூபிப்பது

இறுதியாக இது தான் முக்கியமான பாயிண்ட்... சட்டப்படி, காசோலை கொடுக்கப்பட்டதற்கு ஈடாகப் பணமோ அல்லது பொருளோ வாங்கப்பட்டிருக்க வேண்டும் . அப்படி எதுவுமே அவரிடம் வாங்கவில்லை..அதற்கான ஆதாரங்கள் எதுவுமே அவர்களிடம் இல்லை என்பதை நிரூபிக்கலாம். மேலும் அந்தக் கடனே பொய்யானது அல்லது நிரப்பப்பட்ட தொகைக்குச் சமமான கொடுக்கல் வாங்கல் இல்லை என்பதை நிரூபிக்கலாம். இப்படி செய்தால் நீதிமன்றத்தில் தண்டனையில் இருந்து தப்பிப்பதுடன், காசோலை மோசடி வழக்கிலும் தப்பிக்க முடியும்.

வெற்று காசோலை தரவே கூடாது

பொதுவாக வெறுமனே கையெழுத்திட்ட வெற்று காசோலையை எப்போதும் யாருக்கும் கொடுக்கவே கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொடுத்தால்.. தொகையை கண்டிப்பாக நீங்களே நிரப்ப வேண்டும். மேலும் "Account Payee Only" என்று எழுத வேண்டும். மேலும் காசோலை எதற்காக வழங்கப்படுகிறது (எ.கா. வீட்டு வாடகை, சிறிய அட்வான்ஸ்) என்பதை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி, இரு தரப்பினரும் கையொப்பமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் யாராவது ஏமாற்ற முயற்சித்தால், இதில் கவனமாக இருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+