Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரைமுருகன் அப்ப தான் மைக்கை பிடித்தார்.. "போச்சு".. போனை போட்ட ஆபீசர்ஸ்.. வந்துச்சு பாருங்க கோபம்

துரைமுருகன் கலந்து கொண்ட விழாவில் கரண்ட் திடீரென போய்விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

வேலூர்: துரைமுருகன் தன் பேச்சை சுவாரஸ்யமாக ஆரம்பித்தார்.. அதற்குள் கரண்ட் போய்விட்டது.. இதனால் கடுப்பாகிவிட்டார் அமைச்சர்.

10 வருடம் கழித்து ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, ஏராளமான சாதனைகளையும், மக்களுக்கான அறிவிப்புகளையும், நலத்திட்டங்களையும் வெளியிட்டு வருகிறது.

இதில், சட்டசபை பிரச்சாரங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தாங்கி வருகின்றது..

 மாய தோற்றம்

மாய தோற்றம்

ஆனால், எதிர்க்கட்சிகள் உட்பட, பொதுமக்களும் அதிருப்திக்கு உள்ளாகி வரும் விஷயம், மின்வெட்டு பிரச்சனைதான்.. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு விவகாரமானது, ஒவ்வொருமுறை சட்டசபை கூடும்போதும் பிரச்சனையாக எழுப்பப்படும்.. இதுகுறித்த கேள்விகள் எழுப்பப்பட்டால், அத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் தந்து பேசுவார்.. திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர், இனி இதுபோன்ற பிரச்சனைகள் இருக்காது, அனைத்தும் 2 நாட்களுக்குள் சரிசெய்யப்பட்டு விடும் என்று செந்தில்பாலாஜி கடந்த வருடம் பதிலளித்திருந்தார்.

 கரண்ட் மேட்டர்

கரண்ட் மேட்டர்

ஆனால், 2வது வருடம் துவங்கியும், இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.. அதனால்தான், எடப்பாடி பழனிசாமி முதல் அனைத்து மாஜிக்களும் திமுகவை விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.. "கடந்த முறை ஆட்சியை திமுக இழந்ததற்கு காரணமே இந்த கரண்ட் பிரச்சனைதான்" என்று ஓபிஎஸ் கூறினார்.. "திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையும் வந்துவிடுகிறது. எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது, எந்த நேரத்தில் தடைபடுகிறது என்பது தெரியாமல் மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

அணில்

அணில்

"தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் அணில் தன் வேலையைக் காட்டுகிறது என நினைக்கிறேன்" என்று ஜெயக்குமார் கிண்டலடித்திருந்தார்.. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் இவ்வாறாக இருந்தாலும், மின்வெட்டு பிரச்சனை இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றே தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், திமுக அமைச்சரே, கரண்ட் இல்லாமல் விழாவில் இருந்து கடுப்பாகி கிளம்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

துரைமுருகன்

துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்... இந்த பள்ளியில்தான் துரைமுருகன் படித்தாராம்.. தான் படித்த பள்ளியிலேயே, அமைச்சராக வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கியதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவர்களிடம் பேசினார்.. 70 வருடங்களுக்கு முன்பு நான் இங்கேதான் படிச்சேன் என்று தன்னுடைய மலரும் நினைவுகளை சொல்லி கொண்டிருந்தார்..

 கடுப்பான துரைமுருகன்

கடுப்பான துரைமுருகன்

அப்போது திடீரென கரண்ட் போய்விட்டது.. இதனால், அதிகாரிகளும், எம்எல்ஏக்களும் பதறிப்போய், மின்துறைக்கு போனை போட்டனர். ஆனாலும் கரண்ட் வரவில்லை.. இதனால் மைக் முன்னாடியே, கரண்ட்டுக்காக நின்று கொண்டு காத்திருந்தார் துரைமுருகன்.. ஆனால் கரண்ட் வரவேயில்லை.. இதனால் கடுப்பான அமைச்சர், நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டார்.. அதற்கு பிறகுதான் அவசர அவசரமாக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிவிட்டு, விழாவை பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார்.

 அணில் எங்கே?

அணில் எங்கே?

அதற்கு பிறகு, கரண்ட் வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தையும் எதிர்க்கட்சிகள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த வீடியோவை பலரும், எங்களுக்கும் இப்படித்தானே கடுப்பா இருக்கும்? போய் உங்கள் அமைச்சரையே இதைபற்றி கேளுங்க? அந்த அணில் காட்பாடிக்கு வந்துவிட்டதா? என்று பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+