வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் பலி.. கண்ணீரில் காவலர்.. என்ன நடந்தது?
வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிப்பட்டு காவலர் கோடீஸ்வரனின் மனைவி அனிதா, பிரசவத்தின் போது உயிரிழந்தார். அறுவை சிகிச்சையின் போது, குழந்தை இறந்து பிறந்த நிலையில், தாயும் உயிரிழந்தார். தாய் , சேய் இருவரும் இறந்ததால் அவரது காவலர் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா இரும்பேடு கிரமாத்தைச் சேர்ந்த 26 வயதாகும் கோடீஸ்வரன் என்பவர் சென்னையை அடுத்த ஆவடி பட்டாலியன் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதாவிற்கு 24 வயது ஆகிறது. அனிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த டிசம்பர் 12ம் தேதி, பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தன் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது, பிரசவம் பார்க்கும்படி அனிதாவின் கணவர் கோடீஸ்வரன் மருத்துவமனையை அணுகிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக அனிதாவின் உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது. .
இந்த நிலையில், நேற்று(16-ம் தேதி) இரவு அனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருந்ததாம். இதனை அடுத்து கோடீஸ்வரன் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி கூறினாராம். இந்நிலையில், இன்று காலை அனிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதில், குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடுத்த ஒருமணி நேரத்தில் தாய் அனிதாவும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்,
இதனை அடுத்து மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களால் தான் தன் மனைவியும் தன் குழந்தையும் இருந்துள்ளதாக கோடீஸ்வரன் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications