ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?

முதல்வர் ஸ்டாலின் பயணித்த ரயிலின் அபாய சங்கிலி பெண் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து பெண் ஒருவர் ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரித்த போது, ரயில் மாறி ஏறியதால் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தியது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ரயில் 5 நிமிடம் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட ஆய்வு பணியை தொடங்கி உள்ளார். இதற்காக ரயில் மூலம் சென்னையில் இருந்து காட்பாடி சென்றார்.

கள ஆய்வு திட்டம்

கள ஆய்வு திட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வுத் திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

காலை உணவுத் திட்டம்

காலை உணவுத் திட்டம்

இன்று காலையிலேயே மு.க. ஸ்டாலின் தனது வாகனத்தில் சென்று ஆய்வு பணியை தொடங்கினார். முதலில் வேலூர், சத்துவாச்சாரி, பாரதி நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையல் கூடத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உணவு பரிமாறிய முக ஸ்டாலின்

உணவு பரிமாறிய முக ஸ்டாலின்

தொடர்ந்து அலமேலு மங்காபுரத்தில் 132 மாணவ, மாணவியர்கள் பயிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பறிமாறினார். சத்தான மற்றும் தரமான உணவினை மாணவர்களுக்கு வழங்கிட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

திரண்ட மக்கள்

திரண்ட மக்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு வந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்களது அருகில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலினை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரிடம் நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

 அபாய சங்கிலி மூலம் ரயில் நிறுத்தம்

அபாய சங்கிலி மூலம் ரயில் நிறுத்தம்

இரண்டு நாள் கள ஆய்வை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். ரயில் புறப்பட்டு திருவலம் அருகே முகுந்தராயபுரத்தில் சென்ற போது, திடீரென அபாய சங்கிலியை இழுத்து ரயில் நிபிடித்து பெண் ஒருவர் நிறுத்தியுள்ளார்.

5 நிமிடங்கள் தாமதம்

5 நிமிடங்கள் தாமதம்


இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அபாய சங்கிலியை இழுத்து பிடித்த அந்த பெண் ரயில் மாறி ஏறிவிட்டதாக தெரிவித்துள்ளார். பெண் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த ரயில் முகுந்தராயபுரத்தில் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+