என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்!
மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைமறைவாகி உள்ளார்
Recommended Video
வேலூர்: "என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க" என்று ஊரெல்லாம் அலறி கொண்டு ஓடினார் புதுமாப்பிள்ளை சென்றாயன்! இப்போது அவரைதான் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் மல்லாண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் சென்றாயன். 25 வயதாகிறது. 5 மாசத்துக்கு முன்னாடிதான், வரலட்சுமி என்ற 19 வயது பெண்ணை வீட்டில் கல்யாணம் செய்து வைத்தனர்.
மிட்டூர் பகுதியில் உள்ள விவசாய தென்னந்தோப்பு ஒன்றில் சென்றாயன் கூலி வேலை பார்த்து வந்தார். அதனால் அந்த அடர்ந்த தென்னந்தோப்பிலேயே குடிசை ஒன்றினை போட்டு கொண்டு வசித்து வந்துள்ளார்.

வரதட்சணை
கல்யாணம் ஆகி ஓரிரு மாதங்கள்தான் ஆகியிருக்கும்... சென்றாயன் வரதட்சணை பிரச்சனையை கிளப்பினார். ராத்திரி நேரம் ஆகிவிட்டால் தண்ணியை போட்டுவிட்டு வந்து ரகளை செய்வதும் வாடிக்கையானது. இதுபோக, வரலட்சுமி வீட்டில் சீதனமாக போட்டு விட்ட நகைகளையும் அடமானம் வைத்து ஊர் சுற்றி வந்தார். இதனால் தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது.

பரிதாப மரணம்
கூலி வேலை செய்து வரும் தன் பெற்றோரிடம் வரலட்சுமி நிறைய முறை இதை பற்றி சொல்லி அழுதுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு எனக்கு எந்த நகையும் வேணாம், பொண்ணை மட்டும் அனுப்பினால் போதும் என்று சொன்னாராம் சென்றாயன். இப்போதோ நகை கேட்டு தகராறு செய்யவும், சமரச பேச்சுவார்த்தை பல முறை நடந்தது. நேற்றும்கூட, மதுபோதையில் வந்து வரலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் வரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

காப்பாத்துங்க
இதை பார்த்து பதறிய சென்றாயன், பக்கத்தில் இருந்த கிணற்றில் வரலட்சுமியின் சடலத்தை தூக்கி வீசிவிட்டு, ஊருக்குள் பதறியடித்து கொண்டு ஓடினார். "என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. வந்து காப்பாத்துங்க" என்று சொல்லி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய ஊர்மக்களும் வரலட்சுமியின் சடலத்தை மீட்டு, 2 கிலோமீட்டரில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு எடுத்துச்சென்று எரிக்கவும் முயன்றுள்ளனர்.

மாயம்
விஷயம் கேள்விப்பட்டு வரலட்சுமியின் தாய், மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது, சடலத்தை கண்டு அதிர்ந்தனர். இது குறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் சார் ஆட்சியாளர் பிரியங்கா பங்கஜம் இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆனால் புதுமாப்பிள்ளை சென்றாயனை காணவில்லை. எங்கே மாயமானார் என்று தெரியாமல் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications