அழுகிய நிலையில் நிவேதா.. சிதைந்த முகம்.. வெளியே நீட்டிய எலும்பு.. வேலூரில் பரபரப்பு!

இளம்பெண் கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: குட்டையில் மிதந்து கிடந்தார் நிவேதா.. அழுகிய உடல்.. சிதைந்து போன முகம்.. வெளியே நீட்டி கொண்டிருந்த எலும்பு.. என வேலூர் மக்களை அதிர செய்துள்ளது நிவேதாவின் மரணம்!

வேலூரை அடுத்துள்ள புதுவசூர் மலையில் தீர்த்தகிரி முருகன் கோவில் ஒன்று உள்ளது.. இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் கல்குவாரியில் ஒரு இளம்பெண் சடலமாக கிடந்தார்.. வயது 17 இருக்கும்.. உடல் அழுகி கிடந்தது.. ஆடு மேய்ப்பவர்கள் அந்த பக்கமாக போகவும் பெண்ணின் சடலம் குட்டையில் மிதப்பதை கண்டு போலீசாருக்கு சொன்னார்கள்.

இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர். அப்போதுதான், அந்த பெண்ணின் முகம் ஒரு பகுதி சிதைந்து போய் இருந்தது.. ஒரு கால் எலும்பு முறிந்து கிடந்தது.. அந்த எலும்வு வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது.. ஆனால் அந்த பெண் யார் என்று தெரியவில்லை.

காணவில்லை

காணவில்லை

இதனால் போலீசார் அழுகிய சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கினர். சுற்றுவட்டார பகுதிகளில் யாராவது இளம்பெண் காணாமல் போயுள்ளனரா என்ற லிஸ்ட் எடுத்து தேடினர். அப்போது, போன 14-ந் தேதி, 17 வயது பெண் காணாமல் போனதாக தெரியவந்தது.

கேன்டீன்

கேன்டீன்

அந்த பெண், வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்தவர்.. பெயர் நிவேதா, பிளஸ் 2 படித்துள்ளார்.. வேலூரில் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரி கேன்டீனில் வேலை பார்த்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் டூவீலரில் வேலைக்கு சென்றுள்ளார் நிவேதா.. ஆனால் வேலை முடிந்து வீட்டுக்கு வரவில்லை என்பதால், பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடி உள்ளனர்.

டூவீலர்

டூவீலர்

ஆனால் நிவேதா டூவீலர் மட்டும் ஆஸ்பத்திரி வாசலிலேயே நின்றிருந்தது.. நிவேதாவை காணவில்லை.. இதனால் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பெண்ணின் கைகளில் ஸ்டார், பறவையின் சிறகு போன்ற டாட்டூ போட்டிருப்பார் என்று அடையாளங்களையும் சொல்லி இருந்தனர். இந்த அடையாளங்கள் அனைத்துமே குட்டையில் மிதந்த பெண்ணுக்கும் இருந்ததால், அது காணாமல் போன நிவேதா தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணை

விசாரணை

பெற்றோருக்கு தகவல் சொல்லவும், நிவேதாவின் உடலை கட்டிப்பிடித்து கொண்டு கதறினர்.. இது சம்பந்தமான விசாரணையில், நிவேதா தான் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் உதவியாளராக இருந்த இளைஞருடன் பழகி வந்திருக்கிறார்.. அதேபோல கேன்டீனில் வேலை பார்த்த ஒரு இளைஞரும் நிவேதாவை விரும்பியிருக்கிறார்.. 2 காதல் ஒரே நேரத்தில் நடந்துள்ளது.. 2 பேருமே தங்களைதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிவேதாவுக்கு நெருக்கடி தந்துள்ளனர்.

கல்குவாரி

கல்குவாரி

இதில் ஒருவர்தான், சம்பவத்தன்று நிவேதாவை பைக்கில் தீர்த்தகிரி மலைக்கு அழைத்து வந்துள்ளார். மலைப்பாதையிலேயே நின்று கொண்டு கல்யாண சண்டையும் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அந்த இளைஞர், 80 அடி ஆழமான கல்குவாரியில் நிவேதாவை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அதனால் சம்பந்தப்பட்ட இளைஞர் யார், நிவேதா கடைசியாக போனில் யாருடன் பேசினார், ஆஸ்பத்திரியில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவு.. இவைகளை எல்லாம் வைத்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.. மேலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் நிவேதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்றும் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+