முதல்வர் விஜய் சார் உங்கள் உத்தரவை மதிக்கல.. ராணிப்பேட்டை டாஸ்மாக்கை ரவுண்டு கட்டிய இளைஞர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று இரவு மது வாங்க சென்றுள்ளார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த சேல்ஸ்மேன் சுரேஷ் என்பவரிடம் டைமண்ட் பாட்டில் கொடுங்கள் என்று பாட்டிலுக்கு 140₹ MRP வீதம் கூப்பன் 10 ரூபாய் போக 150₹ தந்துள்ளார். ஆனால் சேல்ஸ்மேன் சுரேஷ் 160₹ ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு வாலிபர் ஏன் 10 ரூபாய் கூடுதலாக தரவேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு , வழிபாடு தலங்கள், பஸ் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி 276 வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள கடைகள், 186 கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள கடைகள் மற்றும் 255 பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள கடைகள் என 717 டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டு மூடப்படும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. அதேபோல் மதுபான பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று இரவு மது வாங்க சென்றுள்ளார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த சேல்ஸ்மேன் சுரேஷ் என்பவரிடம் டைமண்ட் பாட்டில் கொடுங்கள் என்று பாட்டிலுக்கு 140₹ MRP வீதம் கூப்பன் 10 ரூபாய் போக 150₹ தந்துள்ளார். ஆனால் சேல்ஸ்மேன் சுரேஷ் 160₹ ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு வாலிபர் ஏன் 10 ரூபாய் கூடுதலாக தரவேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழக அரசு இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளது.
ஆனால் அதனை சற்றும் மதிக்காமல் மதுபான கடையிலிருந்த சேல்ஸ்மேன் உட்பட 3 பேர் தர முடியாது உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணு தமிழக முதல்வர் யாருனு தெரியாது என்று திமிராக பதிலளித்தார்களாம். இச்சம்பவமத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டுமல்ல.. இன்னும் பல்வேறு மாவட்டங்களில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தொடர்கிறது..இதற்கு குடிமகன்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டும் வருகிறார்கள்.சிலர் டாஸ்மாக்கி ஜிபே பண்ணிய ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்து டாஸ்மாக் கடை எண், கடையில் வேலை செய்பவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை இணைத்து முதல்வர் விஜய்யிடம் புகார் அளிக்கிறார்கள். இந்த விவகாரத்தை பொறுத்தவரை அரசு சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. எம்ஆர்பியைவிட எந்த கடையிலும் பொருளை அதிகமாக விற்க முடியாது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் மட்டும் கூடுதலாகவே வாங்குகிறார்கள். இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் வாங்கும் குறைவானே சம்பளமே காரணமாக சொல்லப்படுகிறது. அதனால் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்க ஆரம்பித்து 15, 20 ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை கூடுதலாக பணம் வாங்குவது தொடர்கிறது.
அதேநேரம் டாஸ்மாக் ஊழியர்கள், சம்பளம் குறைவு என்று தெரிந்து தானே, தாங்களாக முன் வந்து வேலைக்கு சேர்ந்தார்கள்.. அப்புறம் ஏன் கூடுதல் பணம் வாங்க வேண்டும் என்று குடிமகன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது ஒருபுறம் எனில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களும் மது விற்பனையில் ஈடுபடுவதாகவம் அவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் திருச்செல்வன் கடந்த நான்கு நாட்கள் முன்பு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மாநிலம் முழுவதும் 4765 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் 1000-க்கும் மேற்பட்ட எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் இயங்கி வரும் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதை சமூகப் பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்கிற முறையில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வரவேற்கிறது.
அதே நேரத்தில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் அடையாளம் காண்பதில் டாஸ்மாக் அதிகாரிகள் கள ஆய்வு செய்வதில் போதிய அக்கறை செலுத்தாமல் அவசரகதியில் பட்டியல் தயாரித்துள்ளதாக தெரிய வருகிறது. இதில் அரசுக்கு சொந்தமான மதுபான டாஸ்மாக் கடைகளுக்கு இணையாக மது சில்லறை விற்பனை செய்து வரும் தனியார் எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மூடப்பட வேண்டிய பட்டியலில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பக்கத்து கட்டிடத்தில், அருகாமையில் இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள் கள ஆய்வு செய்யப்படவில்லை.
அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதின் மூலம் இந்த தனியார் மனமகிழ் மன்ற மதுக்கடைகளில் அதிக குடிமக்கள் குவியவே வழிவகுக்கும் நிலைமையே ஏற்படுமே தவிர அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார்.














Click it and Unblock the Notifications