குன்னூரில் +2 முடித்த மாணவர் மர்மமான முறையில் மரணம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் ராஜசேகர் என்பவரின் மகன் கார்த்திக். 12-ம் வகுப்பு முடித்த அவர், ஏழ்மை நிலையால் கல்லூரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வேலை தேடிச் செல்வதாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார் கார்த்திக். இந்நிலையில், குன்னூர் அருகே தேயிலைத் தோட்டப்பகுதியில் கார்த்திக்கின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீடியோ













Click it and Unblock the Notifications