காவிரி நதிநீருக்காக மோடியை சந்திப்போம்: பொன். ராதாகிருஷ்ணன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் நிலைமையை விளக்கவும், தமிழகத்தில் எழுந்துள்ள சூழ்நிலையை எடுத்துரைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோரை சந்திக்க இருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், வரும் 8, 9 தேதிகளில் தமிழக பாஜக முக்கியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி, உமாபாரதி ஆகியோரை சந்தித்து தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க வலியுறுத்துவோம். காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications