திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம்... ம.ந.கூ. தலைவர்களுடம் ஆலோசனைக்குப் பின் முடிவு: திருமா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி பிரச்சனைக்காக திமுக நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்நிலையில், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களோடு ஆலோசனை செய்தபின் முடிவு செய்யப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்த திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கிறோம். இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications