சாலையைக் கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து... 3 பேர் பலி... 3 பேர் காயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிண்டியில் சாலையைக் கடக்க முயன்ற செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த மாணவிகள் சித்ரா, காயத்ரி, ஆயிஷா என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. பலியான மாணவிகளின் உடல்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications