டெங்கு பலி... தூங்கும் திருப்பூர் நகராட்சியை தட்டி எழுப்ப சங்கு ஊதிப் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் 10 வயது சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானான். சிறுவனின் மரணத்திற்கு திருப்பூர் மாநகராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர். மாநகராட்சியைக் கண்டித்து, சங்கு ஊதி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் மாநகராட்சி அலட்சியமாக நடந்து கொள்வதாகவும், எனவே, தூங்கும் அரசு அலுவலர்களைத் தட்டி எழுப்பவே சங்கு ஊதுவதாகவும் தெரிவித்தனர். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த கட்டமாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications