நெல்லை கலெக்டர் ஆபிசில் திடீரென தீப்பிடித்த சுவிட்ச் போர்ட்... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மாவட்ட ஆட்சியர் அறைக்கு அருகே இருந்த சுவிட்ச் போர்டில் திடீரென தீ பிடித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications