திண்டிவனம் அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து... ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி பதூர்பேட்டா பகுதியைச் சேர்ந்த ஆஞ்சநேயலு (52), அவருடைய மனைவி கங்காபாய் (42) மற்றும் அவரது மகன் ரோகித்குமார் (28) ஆகியோர் ஆவர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கார் டிரைவர் மோகனகிருஷ்ணன் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications