ஆசையாக நாவல் பழம் பறிக்கப்போன 3 பிஞ்சுகளுக்கு நேர்ந்த விபரீதம்.. திண்டிவனம் அருகே சோக சம்பவம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, நாவல் பழம் பறிக்கச் சென்ற 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் சஞ்சய் (10), மாரிமுத்து என்பவரின் இரண்டு மகள்கள் பிரியதர்ஷினி (10) சுபஸ்ரீ (8) ஆகிய மூவரும் கோனேரிகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

வழக்கம்போல் இன்று பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள், இன்று மாலை பள்ளி முடிந்தபிறகு, வீட்டிற்கு சென்று அங்கிருந்து நல்லாத்தூரில் இருந்து ஓங்கூர் செல்லும் ஓடையில் உள்ள நாவல் மரத்தில் நாவல்பழங்களை பறித்து வருவதற்காகச் சென்றுள்ளனர்.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அந்த ஓடையில் நீர் அதிக அளவில் செல்வதாக கூறப்படுகிறது. நாவல் பழம் பறிக்கும்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மூவரும் தவறி ஓடையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அந்த வழியாக சென்ற ஒருவர், ஒரு குழந்தையின் பள்ளி சீருடை மட்டும் நீரில் மேலே தெரிந்ததைப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஓடையில் தேடிய நிலையில், மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நாவல் பழம் பறிக்கச் சென்ற பள்ளிச் சிறார் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சஞ்சய், பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய 3 குழந்தைகள் ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குழந்தைகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications