மரக்காணம் கள்ளச்சாராயம் பலி 7 ஆக உயர்வு! சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்
விழுப்புரம்: மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் வாம்பாமேடு எனும் இடத்தில் சிலர் காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த இடத்திற்கு சாராயம் குடிக்க வந்த சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65). மற்றொரு மண்ணாங்கட்டி (55) இதில் சம்பவ இடத்திலேயே தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ் மற்றும் ராஜமூர்த்தி ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.

இதில் இதில் சம்பவ இடத்திலேயே தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழ, சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65). மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் தங்கள் வீட்டில் மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் 3 பேர் இறந்துவிட, கள்ளச்சாராயம் காய்ச்சிய இடத்தில் மயங்கி விழுந்தவர்களில் 3 பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் நேற்று வரை 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications