கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ்-கார் மோதி சென்னையை சேர்ந்த 6 பேர் பலியானது எப்படி?
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் என்ற பகுதியில், அரசு பஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர் இமான் (28). இவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர், நேற்று, ஊட்டியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.
நேற்று இரவு, இவர்களது கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் வந்தபோது, சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கிச் சென்றது. பஸ்சை அழகுராஜன் (40), என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார்.

நேருக்கு நேர் மோதல்
தியாகதுருகம் புறவழிச்சாலை பிரிதிவிமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே சுற்றுலா சென்று திரும்பியவர்கள் வந்த எஸ்யூவி வகை கார் மற்றும் எதிரே வந்த அரசு பஸ் இரண்டும், எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பஸ்சின் முன்பக்க அடியில் காரின் போனட் பகுதி சிக்கிக்கொண்டதால் சில அடி தூரத்துக்கு அந்த காரை, பஸ் இழுத்து சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

பஸ்சுக்கு அடியில் சிக்கிய போனட்
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சுக்கு அடியில் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல், எபினேசர் பெஞ்சமின், சென்னையை சேர்ந்த மோனிக்கா, ரபேக்கால், ஜெசி, ஜோஸ்வா உட்பட்ட ஆகிய 6 பேரும் இந்த விபத்தில், உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகும்.

பஸ் பயணிகள்
இவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் வந்த 5 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். இந்த பஸ்சில் சுமார் 36 பேர் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

எஸ்யூவி கார்
விபத்தில் சிக்கிய வாகனம் மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி என்ற எஸ்யூவி வகையைச் சேர்ந்தது. இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் டிரைவர்களின் தூக்க கலக்கம்தான் இதன் பின்னணியில் உள்ளதா, எந்த டிரைவர் மீது தவறு என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications