விழுப்புரம் கலெக்டர் ஆபிஸுக்கு நடமாடும் நகைக்கடையாக வந்த தொழில் அதிபர்.. வியந்து பார்த்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெற நடமாடும் நகைக்கடையாக கர்நாடகா தொழில் அதிபர் ஒருவர் வந்துள்ளார். 2¼ கிலோ நகைகளை அணிந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 16ம் தேதி முதல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த மார்ச் 16 முதல் ஏப்ரல் 19ம் தேதி (தேர்தல் அன்று வரை) வரை தமிழகத்தில் ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000-க்கு மேல் அல்லது ரூ.10,000-க்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படைக் குழுவினரால் பறிமுதல் செய்ய தொடங்கினார்கள்.

A business tycoon who came to Villupuram Collector s Office as a mobile jeweller

உரிய ஆவணங்களை காட்டி அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபிஸில் பணம் மற்றும் பரிசு பொருட்களை திரும்ப பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில், மாநில எல்லைகளில் மட்டும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக லோக்சபா தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை நடத்தினார்கள். அப்போது புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிமோகாவை சேர்ந்த 53 வயதாகும் தொழில் அதிபர் ரெஜிமோன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்..

இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் அளித்தார். அதைதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

பணத்தை பெறுவதற்காக வந்த கர்நாடகா தொழில் அதிபர் ரெஜின்மோன் நடமாடும் நகைக்கடை போல் வந்தார். அவரை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் திகைத்து போனார்கள். ஏனெனில் தொழில் அதிபர் ரெஜின்மோன், தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்தார்.

தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோனுக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் சிமோகா சொந்த ஊர் ஆகும். இவருக்கு சொந்தமாக டீ எஸ்டேட் இருக்கிறதாம். தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருகிறாராம். அவருக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியமாம். அதனால் தான் எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+