விழுப்புரம்.. காதலிகளைக் கொன்று வீடியோ எடுத்த கொடூரன்.. மனைவியிடம் காட்டி மகிழ்ந்த வக்கிரம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரும்பகை கிராமத்தில் தேவேந்திரன் எனும் வாலிபர் ஆசைப்படும் பெண்களை அனுபவித்து, பின்னர் கொலை செய்து வீடியோவாக எடுத்து மனைவியிடம் அதை காண்பித்து, மனைவியை பயமுறுத்தி அதிர்ச்சியூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பகை கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் தேவேந்திரன் (25.).அதே கிராமத்தில் வசிப்பவர் தேவேந்திரனின் அத்தையான 43 வயது குட்டியம்மாள். இவருக்கு கார்த்திகேயன் என்று ஒரு மகன் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் குட்டியம்மாள் திடீரென மாயமாகி உள்ளார்.
அம்மாவைக் காணவில்லை என்று கார்த்திகேயன் அங்கும் இங்கும் அம்மாவைத் தேடி அலைந்திருக்கிறார். இதற்கிடையில் செஞ்சியை அடுத்த பெரும்புகை கிராமத்தில் நேற்று மலையடிவாரத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

குட்டியம்மாள்
அதோடு கிராமத்து வாசிகளும் குட்டியம்மாளை கடைசியாக தேவேந்திரனுடன் பார்த்ததாக கூறியுள்ளனர். போலீசார் ஒருபுறம் துப்பு துலக்கிக் கொண்டு இருக்க, தேவேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார் கார்த்திகேயன். அங்கு தேவேந்திரன் இல்லை, அவரது மனைவியிடம் கார்த்திகேயன் தனது அம்மா குட்டியம்மாளை கடைசியாக தேவேந்திரனுடன்தான் ஊர்மக்கள் பார்த்ததாகக் கூறுகிறார்கள் என்று கூறி தேவேந்திரனைப் பற்றி விசாரித்து இருக்கிறார்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
தேவேந்திரனின் மனைவி அப்போதுதான் கார்த்திகேயனிடம் திடுக்கிடும் வீடியோ ஒன்றைக் காண்பித்து இருக்கிறார். வீடியோவில் தேவேந்திரன் ஒரு இளம் பெண்ணை கயிற்றால் கழுத்தை நெறுக்கி கொலை செய்துவிட்டு, உன்னுடன் பழகுவது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் உன்னைக் கொன்றேன் என்று வாக்குமூலம் போல பேசி இருக்கிறார். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து இருந்த கார்த்திகேயனிடம், 2 வருடங்களுக்கு முன் சுமதியை தேவேந்திரன் காதலித்து வந்ததாகவும், தனக்குப் பிடிக்காமல் சண்டை போட்ட போது, சுமதியிடம் இருந்து கணவர் விலகி விட்டார்.

காதலி கொலை
ஆனால், சுமதி விடாமல் தொந்தரவு செய்த நிலையில் கிராமத்தில் இருக்கும் மலை உச்சிக்கு அழைத்து சென்று இப்படி கொலை செய்து வீடியோ எடுத்து தம்மிடம் காண்பித்தார், மெமரி கார்டையும் தன்னிடமே கொடுத்துவிட்டார் என்றும் கூறி கார்த்திகேயனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். உன் அம்மாவுக்கும் இது போல எதுவும் நடந்து இருக்கலாம் என்று தேவேந்திரன் மனைவி சொல்ல, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் காவல்துறையில் புகார் அளித்தார்.

அழுகிய நிலையில் உடல்
காவல்துறை விரைந்து செயல்பட்டதில், தேவேந்திரனுக்கும் குட்டியம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளான் தேவேந்திரன். மேலும், சுமதியை கொலை செய்த மலை உச்சி, குட்டியம்மாளை கொலை செய்த மலை உச்சி என்று இரு மலைகளுக்கு போலீசாரை அழைத்து சென்று காண்பித்துள்ளான். குட்டியம்மாளின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. சுமதியின் சடலம் அழுகி மண்ணோடு மண்ணாகிய நிலையில் வெறும் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

பெண்களுக்கு வலைவீச்சு
இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சியை சுற்றியுள்ள கிராமங்களில் திருவிழாக்கள் நடந்தால், தேவேந்திரன் நிறைய பெண்களுக்கு காதல் வலை வீசுவார் என்று கிராம மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் தேவேந்திரனால் எத்தனை பெண்கள் இப்படி பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிற விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications