என்னதான் ஆச்சு விஷாலுக்கு..மேடையில் மயங்கி சரிஞ்சுட்டாரே! பதறி போன ரசிகர்கள்.. கூடவே இருந்த பொன்முடி
விழுப்புரம்: விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த நடிகர் விஷால் மேடையில் பேசி முடித்தபின் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழாவானது விமர்சையாக நடைபெறும். இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் விழாவை முன்னிட்டு மிஸ் கூவாகம் திருநங்கைகள் அழகி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நகராட்சி திடலில் மிஸ் கூவாகம் திருநங்கை அழகி போட்டியானது நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழ்நாடு இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஷால் கலந்து கொண்டிருந்தார். தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டவர்களை வாழ்த்து பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிய போது திடீரென விஷால் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து அருகில் இருந்தோர் அவரை தாங்கி பிடித்து காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டிருந்த நிலையில் விஷாலை அவர் தான் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் வெளியானது. சுந்தர் சி இயக்கியிருந்த இந்த படம் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை விஷால் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் இடையே பேசிக் கொண்டிருந்த போது விஷாலின் கைகள் நடுங்கியது. இதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது பொது நிகழ்ச்சியில் மயக்கம் அடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications