அடுத்த ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு- ஈபிஎஸ் பதவி விலகுவார்: மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் அடுத்த ஒன்றரை மாதத்தில் தீர்ப்பு வரும்... அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திண்ணை பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு திமுகவே காரணம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அப்பட்டமான பொய். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திப்பது திமுக. தமிழகத்தில் ஒரு பெரும்பான்மை ஆட்சிக்கு மொத்தம் 117 எம்.எல்.ஏக்கள் தேவை. எடப்பாடி அரசுக்கு 5 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் கூடுதலாக உள்ளனர்.
ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. இத்தீர்ப்பு வரும்போது முதல்வர் எடப்பாடி அரசு கவிழும். முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகுவார்.
திமுக ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று தமிழகத்தை விரும்பாமல் வெளி மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் செல்கின்றன. திமுக ஆட்சியில்தான் விக்கிரவாண்டி தொழிற்பேட்டையை அறிவித்தோம். அடுத்து திமுக ஆட்சி அமையும் போது அந்த தொழிற்பேட்டையை செயல்படுத்துவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications