நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது
விழுப்புரம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.. குறிப்பாக, அதிமுகவின் தூண்களாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் இன்றைய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
சிவி சண்முகம் பேசும்போது, ''அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். "நயன்தாரா" வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா? "நயன்தாராவை" திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா? என்று கேட்டுள்ளார்.

விழுப்புரம் சிவி சண்முகம்
அதேபோல திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ''பணத்தை வைத்து திமுக மக்களை வீழ்த்துகிறது. ஏற்கெனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பிறகு ஹாட் பாக்ஸ் கொடுத்தார்கள். பின்பு சேலை கொடுத்தார்கள். பெண்கள் எல்லோரும், ''பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது?'' என்று கேட்கிறார்கள்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்
தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டதாகவும் அதில் எந்த உள் நோக்கமும் இல்லை எனவும் சி.வி. சண்முகம் விளக்கம் தந்துள்ளார்.. எனினும், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இக்கட்டான சூழலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம், ஆனால் இவர்களின் தற்போதைய அணுகுமுறை கட்சிக்குள்ளும் வெளியேயும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது..
திண்டுக்கல் சீனிவாசன்
சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கள் பெரும்பாலும் ஆவேசமாக இருந்தாலும், சமீப காலமாகவே அவர் கையாளும் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லையை தாண்டுவதாக விமர்சனங்கள் எழுகின்றன..
தனிநபர் விமர்சனங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்த தேவையற்ற ஒப்பீடுகள் கட்சியின் கண்ணியத்தை குறைப்பதாக நடுநிலையாளர்கள் அரசியல் விமர்சகர்களும் கருதுகிறார்கள்.
சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் இவர்கள் இருவருமே தங்களது பேச்சின் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு தேவையற்ற விமர்சனங்களுக்கு இடம் தந்துள்ளதாகவே தெரிகிறது.. அதிலும் இலவச திட்டம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் முன்வைத்துள்ள கருத்துக்கள், அடிமட்டத் தொண்டர்களுக்கு மக்கள் மத்தியில் பதில் சொல்ல முடியாத இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தொண்டர்கள்
களத்தில் இரவு பகலாக பணியாற்றும் தொண்டர்கள், தங்கள் தலைவர்கள் கொள்கை ரீதியான விமர்சனங்களை முன்வைப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள்.. தங்களக்கு இதுபோன்ற மூத்த தலைவர்கள் முன்மாதிரியாக இருப்பார்கள் என்றுதான் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், இது போன்ற சர்ச்சை பேச்சுக்கள் வெளியாகும் போது, அவர்கள் பொதுமக்களின் ஏளனத்திற்கும் கேள்விக்கணைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.. "வெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் வேளையில், தலைவர்களே இப்படித் தடம் புரளலாமா?" என்ற ஆதங்கம் தொண்டர்களிடையே பரவலாக எழுந்து வருகிறது.
அதாவது, ஒரு கட்சியின் பிம்பத்தை உருவாக்குவது தொண்டர்கள் என்றால், அதை சிதைப்பது தலைவர்களின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களாகவே அமைந்துவிடுகின்றன..
தேர்தல் கூட்டணி
அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் வலுவான கூட்டணிகளை அமைப்பதும், இருக்கும் கூட்டணிகளைத் தக்கவைப்பதும் மிக முக்கியம்.. இந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திரிஷா பற்றின சொன்ன விமர்சனமும், அதையொட்டிய அவருடைய வருத்தத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
இதுபோன்ற மூத்த தலைவர்களின் தரம் தாழ்ந்த பேச்சுக்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒருவித அசிங்கத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.. சர்ச்சையாகி பேசிவிட்டு, அதற்கு உடனடியாக வருத்தத்தை பதிவு செய்தாலும்கூட, உதிர்ந்த சொற்களை அள்ளிவிட முடியாது.. இவையணைத்துமே எதிரணிக்கு சாதகமாக அமைந்து, தேர்தல் பிரச்சாரத்தின் திசையையே திசைதிருப்ப செய்துவிடும் அரசியல் கட்சிகள் மறந்துவிடக்கூடாது..
மக்களின் நலன்
மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு பதிலாக, தனிநபர் தாக்குதல்களே செய்திகளில் இடம்பிடிப்பது அவர்களின் ஆரோக்கியமான அரசியலுக்கும் அழகல்ல..
அரசியல் முதிர்ச்சி என்பது பதவிகளில் மட்டுமல்ல, பேசும் பேச்சிலும் வெளிப்பட வேண்டும்.. தேர்தல் நெருங்கும் வேளையில், வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், கண்ணியமான விமர்சனங்களே காலத்தின் கட்டாயம்..
மூத்த தலைவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டால், அது தனிநபரைத் தாண்டி ஒட்டுமொத்த இயக்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.. தமிழக அரசின் இலவச பேருந்து பயணத்தை, "ஓசி பஸ்" என்று சர்ச்சையாக பேசிய திமுக அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் உண்மை!!
-
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications