‛துணிவு’.. ஒரு டிக்கெட் ரூ.1000? தியேட்டரை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்.. உடனே நடந்த மாற்றம்.. அடடே!
விழுப்புரம்: நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11ல் திரைக்கு வர உள்ளது. படத்துக்கான டிக்கெட் விற்பனை தற்போது துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திரையங்கில் துணிவு படத்துக்கான சிறப்பு காட்சி டிக்கெட் ரூ.200க்கும் பதில் ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் அவர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் உடனே மாற்றம் நிகழ்ந்த நிலையில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித் உள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் இவர்களுக்கு தீவிர ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் தான் பொங்கலையொட்டி தமிழ்நாட்டில்ள விஜய், அஜித் ஆகியோர் நடித்த படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளன. இதற்கு முன்பு வீரம், ஜில்லா படங்கள் ஒன்றாக நேருக்கு நேர் மோதிய நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய், அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வருகின்றன.

ஜனவரி 11ல் ஒன்றாக ரீலிஸ்
அதன்படி இயக்குனர் எச்.வினோத் இயக்கிய நடிகர் அஜித்தின் ‛துணிவு' படமும், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' திரைப்படமும் 11ம் தேதி ஒன்றாக திரைக்கு வர உள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே தான் வாரிசு, துணிவு படங்களின் போஸ்டர்கள், டிரெய்லர்கள் உள்பட அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி இணையத்தை கலக்கி டிரெண்ட்டிங்கில் இடம்பிடித்து வருகின்றன.

டிக்கெட் வாங்கும் ரசிகர்கள்
இது ஒருபுறம் இருக்க வழக்கம்போல் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே கருத்து மோதல்கள் தொடங்கி உள்ளன. இதனால் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துணிவு, வாரிசு படங்கள் பற்றிய கருத்துகள் தெறிக்கவிடப்படுகின்றன. ஒரே தேதியில் துணிவு, வாரிசு படங்கள் திரைக்கு வந்தாலும் கூட ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகின்றனர்.

திண்டிவனம் தியேட்டரில் டிக்கெட்
பல தியேட்டர்களில் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் புகார் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் படம் ரீலிசாகும் தேதியான 11ம் தேதி இரவு ஒரு மணிக்கு அஜித்தின் துணிவு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி உள்ளது.

ரூ.1000க்கு விற்பதாக குற்ச்சாட்டு
இந்நிலையில் படத்தின் டிக்கெட்டின் விலை 200 ரூபாய் என அச்சிடப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.500 மற்றும் ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கோபமடைந்தனர். இந்நிலையில் தான் அஜித் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரோசனை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் திரையரங்கில் விசாரணை செய்தனர்.

உடனே நடந்த மாற்றம்
மேலும் படத்தின் டிக்கெட் அச்சிடப்பட்ட 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை அடுத்துஅச்சிடப்பட்ட விலைக்கு மேல் ஆகிய தொகை திருப்பி தரப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications