திமுகவினர் செய்யும் கொலை குற்றங்களை குடும்பச் சண்டை என கடப்பதா? வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை காட்டம்!
விழுப்புரம் : ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் ஸ்டாலின் கடந்து செல்ல முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று மாலை பழக்கடையில் நடைபெற்ற தகராறில், தடுக்க வந்த இப்ராஹிம் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் கத்தியால் குத்தியவர் ஸ்டாலின் படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதனைக் குறிப்பிட்டு திமுக அரசை விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

விழுப்புரம் கொலை
விழுப்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு நேற்று மாலை வந்த ஞானசேகரின் மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் அங்கு தகராறு செய்துள்ளனர். சண்டையிட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த இப்ராஹிம் என்பவர் இருவரையும் தடுத்து சமரசம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், வல்லரசு இருவரும் இப்ராஹிமை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின்போது அந்நபர்களில் ஒருவர் முதல்வர் ஸ்டாலின் படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருந்ததைத் தொடர்ந்து, திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
இதுதொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், விழுப்புரத்தில் பழக்கடை நடத்தி வரும் ஞானசேகருக்கு வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்திற்குத் தருவதில்லை என்றும், ஞானசேகரின் மனைவி சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மகன்கள் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்று பிரச்சனை செய்திருக்கிறார்கள். அப்போது தலையிட்ட இப்ராஹிம் என்பவரை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, அங்கு தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்துள்ளார் என விளக்கம் அளித்தார்.

முதல்வர் படம் பொறித்த பனியன்
இந்நிலையில், முதல்வரின் விளக்கத்தை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "விழுப்புரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால், சட்டசபையில் குடும்பச் சண்டை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.

அண்ணாமலை அட்டாக்
குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு குற்றச் சம்பவங்களும், குடும்பச் சண்டை என்ற அளவில் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது. ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது. பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறும், கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்க தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications