மாமா வீட்டுக்கு விருந்துக்கு போன மாணவன்.. கடைசியில் இப்படியா பார்க்கணும்.. விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரம்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவன் கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக விழுப்புரத்தில் உள்ள தன் மாமா வீட்டுக்கு விருந்துக்கு சென்றார். அங்கு திருவிழா பார்த்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவனது மாமா படுகாயமடைந்தார். கோவில் திருவிழாவின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நித்திஷ் குமார் (வயது 14). மாணவன் சித்திரைச் சாவடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவன் வீட்டருகே உள்ள தன் நண்பர்களுடன் விளையாடி நேரம் போக்கி வந்தான்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள அவனது மாமா அய்யனார், தன் ஊரில் கோவில் திருவிழா நடப்பதாகவும், அதற்கு வருமாறும் நித்திஷ்குமாரின் குடும்பத்தினரை அழைத்துள்ளார். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவன் நித்திஷ் குமார் விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் உள்ள தன் மாமா அய்யனார் வீட்டுக்கு சென்றார்.
நேற்று பெரும்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. நேற்று முன் தினம் 8 ஆம் திருவிழாவின் நிகழ்ச்சியாக, அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது அம்மனுக்கு மேல் பகுதியில் இரும்பினால் ஆன குடை இருந்தது. அம்மன் வீதி உலா வாகனத்தில் மாமா பையன் கிருஷ்ணராஜ் (14) அமர்ந்திருந்தான். அப்போது நித்திஷ்குமாரையும் தன்னுடன் அமருமாறு அழைத்திருக்கிறார்.
இருவரும் அம்மன் வாகனத்தில் இருந்தபடி வந்தனர். நள்ளிரவு நேரத்தில் பெரும்பாக்கம் மந்தக்கரை தெருவில் அம்மன் வீதிஉலா வந்தபோது அப்பகுதியில் சென்ற மின் கம்பி இரும்பு குடையின் மேல் பகுதியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் கீழே அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் நித்திஷ்குமார், கிருஷ்ணகுமார் மீதும் தாக்கியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
நித்திஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவிழாவில் அம்மன் வீதி உலா வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications